உலகம்

38 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த உரிமை... கால்பந்து மைதானத்தில் குவிந்த 3,500 முஸ்லிம் பெண்கள்!

ஈரானில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு, முஸ்லிம் பெண்கள் கால்பந்து போட்டியை மைதானத்துக்குச் சென்று கண்டு ரசித்தனர்.

38 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த உரிமை... கால்பந்து மைதானத்தில் குவிந்த 3,500 முஸ்லிம் பெண்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஈரான் நாட்டில் ஆடவர் விளையாடும் கால்பந்துப் போட்டியை பார்ப்பதற்கு கடந்த 1981ம் ஆண்டு முதல் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் கால்பந்தாட்டத்தை நேரில் காண ஆண் போல வேடமிட்டுச் சென்ற பெண் ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அந்தப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த விவகாரம் உலக மக்களை நடுங்கச் செய்தது. பலரும் ஈரான் அரசின் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பல இடங்களில் போராட்டமும் நடைபெற்றது. இதனையடுத்து சர்வதேச கால்பந்து சம்மேளம் இதில் தலையிட்டு ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஈரான் நாட்டுப் பெண்களுக்கு கால்பந்து போட்டியை பார்க்க அனுமதி வழக்கப்பட்டது. இதனையடுத்து ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஆசாதி மைதானத்தில் கால்பந்தாட்டம் நடைபெற்றது.

38 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த உரிமை... கால்பந்து மைதானத்தில் குவிந்த 3,500 முஸ்லிம் பெண்கள்!

இந்தப் போட்டியைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 3,500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியின் போது, ஈரான் முஸ்லிம் பெண்கள், கையில் ஈரான் நாட்டுக் கொடியையும், பதாகைகளையும் ஏந்தி கோஷமிட்டனர்.

மேலும் மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடன் போட்டியைக் கண்டு ரசித்தனர். தற்போது இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories