உலகம்

விவாகரத்துக்கு உண்மையான காரணம் அது இல்லையா? - கணவருக்கு ரூபாய் 5 கோடி நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

உண்மையான காரணத்தைக் கூறி விவாகரத்து பெறவில்லை என கணவர் தொடுத்த வழக்கில் அவருக்கு இழப்பீடாக 5.31 கோடி ரூபாய் வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவாகரத்துக்கு உண்மையான காரணம் அது இல்லையா? - கணவருக்கு ரூபாய் 5 கோடி நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்காவின் கிழக்கு மாகாணப் பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட் கெவின் ஹோவர்ட். இவருக்கு கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடைபெற்று, 12 வருடங்களாக தம்பதியர் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்தார்.

இந்த பிரச்னையின் போது, ராபர்ட் கெவினின் மனைவி தன் கணவர் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதாகக் கூறி விவாகரத்து பெற்றார். பின்னர், சில மாதங்களுக்கு, தன் மனைவி உண்மையான காரணத்தைக் கூறி தன்னிடம் விவாகரத்து பெறவில்லை என ராபர்ட்டுக்கு சந்தேகம் எழுந்தது.

இதனையடுத்து, தன் மனைவியின் செயல்பாடுகளை உளவு பார்க்க உளவு நிறுவனம் ஒன்றில் ராபர்ட் உதவிகேட்டுள்ளார். அந்த நிறுவனம் ராபர்ட்டின் மனைவியை உளவு பார்த்து, அவர் வேறு ஒரு ஆணுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறியுள்ளனர். அவருடன் வாழ்வதற்குத் திட்டமிட்டுத்தான் விவாகரத்து பெற்றுள்ளார் என்பதும் தெரியவந்தது.

ராபர்ட் கெவின் ஹோவர்ட்
ராபர்ட் கெவின் ஹோவர்ட்

இந்நிலையில், தனது முன்னாள் மனைவியின் காதலன் மீது வழக்குத் தொடர்ந்தார் ராபர்ட். அவரால் தனது குடும்ப வாழ்க்கையை இழந்துவிட்டதாகவும், அந்த இழப்புக்கு நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “மனைவி விவாகரத்து பெற்றுவிட்டார். ஆனால் ராபர்ட்டின் வாழ்க்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு நஷ்ட ஈடாக ராபர்ட்டின் முன்னாள் மனைவின் காதலனுக்கு 5.31 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

அமெரிக்காவில் ஒரு திருமணத்திற்கு இடையூறு விளைவிக்கும் நபருக்கு எதிராக வழக்குத் தொடர அந்த நாட்டு சட்டம் அனுமதி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories