உலகம்

“விக்ரம் லேண்டர் உயிர்ப்புடன் இருந்தால்...” : இஸ்ரோவை எச்சரிக்கும் ஐரோப்பிய விண்வெளி மையம்!

விக்ரம் லேண்டர் சந்திக்கும் ஆபத்துகள் குறித்து ஐரோப்பிய விண்வெளி மையம் இஸ்ரோவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

“விக்ரம் லேண்டர் உயிர்ப்புடன் இருந்தால்...” : இஸ்ரோவை எச்சரிக்கும் ஐரோப்பிய விண்வெளி மையம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இஸ்ரோவால் நிலவின் தென்துருவப் பகுதிக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. கடந்த செப்டம்பர் 7ம் தேதி நிலவை நெருங்கிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை, அதிகாலையில் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்டது.

விக்ரம் லேண்டர் நிலவை எட்டுவதற்கு 2.1 கி.மீ தொலைவு இருக்கையில், திடீரென தகவல் துண்டிக்கப்பட்டது. இதனால், இஸ்ரோ விஞ்ஞானிகளும், இந்திய மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், ஆர்பிட்டரில் உள்ள கேமரா மூலம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் உடையாமல் சாய்ந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. லேண்டரின் ஆயுட்காலம் 14 நாட்கள் என்பதால், அதற்குள்ளாக தகவல் தொடர்பை ஏற்படுத்த விஞ்ஞானிகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

“விக்ரம் லேண்டர் உயிர்ப்புடன் இருந்தால்...” : இஸ்ரோவை எச்சரிக்கும் ஐரோப்பிய விண்வெளி மையம்!

இந்நிலையில், விக்ரம் லேண்டர் சந்திக்கும் ஆபத்துகள் குறித்து ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது :

“நிலவின் தென் துருவம் ஆபத்தான சூழல் நிறைந்த பகுதியாகும். அங்கு கதிர்வீச்சுகள் அதிகமாக இருக்கும். மேலும், தூசுகள் நிறைந்த பகுதி என்பதால் அபாயகரமானது. நிலவின் மேற்பரப்பில் உள்ள தூசுகள், விக்ரம் லேண்டரின் பாகங்களோடு ஒட்டிக்கொண்டு, இயந்திரச் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

துகள்களால் ஏற்படும் மின்காந்த அலைகள் எதிர்காலத்தில் லேண்டர்களுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தாக இருக்கலாம். நிலவில் காணப்படும் தூசுகளின் செயல்கள் பற்றி அதிகம் ஆராயப்படவில்லை.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நிலவில் கடைசியாக காலடி வைத்த யூஜின் செர்னனின் அனுபவத்தை மேற்கோள் காட்டியுள்ள ஐரோப்பிய விண்வெளி மையம், “லேண்டர் உயிர்ப்புடன் இருக்கும் பட்சத்தில், நீங்கள் தொடர்ந்து விண்கலத்திற்கு வெளியேயும், உள்ளேயும் தூசு பிரச்னையை எதிர்த்துப் போராடவேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories