உலகம்

ஹாங்காங் மக்கள் புரட்சி : தடையை மீறி லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் !

ஹாங்காங்கில் புதிதாக அமையவிற்கு சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் முன்பு லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹாங்காங் மக்கள் புரட்சி : தடையை மீறி லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஹாங்காங் இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்திலிருந்து. பின்னர் 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சீனா நிர்வகிக்கும் கட்டுப்பாட்டுக்குள் ஹாங்காங் உள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஹாங்காங் மக்களுக்கென தனி பண மதிப்பு, சட்டம் நிர்வாகம் என இருந்து வந்தது.

இந்தநிலையில், ஹாங்காங்கில் சமீபத்தில் குற்றவாளிகளை சீனாவுக்கு பரிமாற்றம் செய்வதற்கான சட்ட திருத்தம் செய்வதற்கு முடிவு செய்து, அதற்கான மசோதாவையும் சட்டசபையில் கொண்டு வந்தது. ஆனால் இது ஹாங்காங் மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மக்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஹாங்காங் நிர்வாகம் மக்களின் போராட்டத்திற்கு பிறகு மசோதாவை நிறுத்திவைத்தது. ஆனாலும் மசோதாவை முழுமையாகத் திரும்பப்பெறவில்லை, மேலும் ஹாங்காங் நிர்வாக ஆட்சியாளர் கேரி லாம் பதவியை விட்டு விலகவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியான எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், பிரிட்டனின் நிர்வாகத்திலிருந்து ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதன் 22ஆவது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டு, ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது அரசு சார்பில், மாநாட்டு மற்றும் கண்காட்சி அரங்கம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டது. கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு சிறிது நேரத்தில் போராட்டக்காரர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களின் ஒரு பிரிவினர் அங்கு அரசு ஏற்பாடு செய்து வைத்திருந்த கண்காட்சி அரங்கம், மற்றும் ஹாங்காங்கின் நாடாளுமன்ற அவை அமைந்துள்ள கட்டடத்தின் வெளிப்புற கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அரசுக்கு எதிரான வாசகங்களை சுவர்களில் எழுதியதுடன், அங்குள்ள சாலைகளை தடுத்து வளாகத்தை முற்றுகையிட்டனர்.

ஹாங்காங் மக்கள் புரட்சி : தடையை மீறி லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் !

ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் உருவானது. அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் மிளகுப்பொடியை தூவினர். தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடந்தது. தொடர்ந்து ஹாங்காங்கில் பதற்றமான சூழல் உருவாகி உள்ளதாக அந்நாட்டு செய்தி நாளிதழ்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது.

சீனாவில் அந்நாட்டு குடிமகன்களை அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இருந்தும் அரசை எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அரசை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories