உலகம்

ஈரானில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் : சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்!

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பகுதியில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.

ஈரானில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் :  சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தபிறகு திடீரென ஈரானுடனான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக அறிவித்தார். இந்த சூழலில் ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி உள்ளது.

மேலும், ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் எர்பில் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பணியாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை, உடனடியாக நாடு திரும்பும்படி அமெரிக்கா மே 16-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து ஈரான் தனது சிறிய ரக போர் விமானம், போர்க்கப்பல்களை அமெரிக்காவை நோக்கி திருப்பியதாக சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.

அமெரிக்க நட்பு நாடுகளின் 4 எண்ணெய் கப்பல்கள் மீது ஓமன் வளைகுடாவில் கடந்த மாதம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ஈரான் தான் காரணம் என அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். பின்னர், ஈரானை எச்சரிக்கும் விதமாக தனது போர்க் கப்பல்களையும், போர் விமானங்களையும் ஈரானை நோக்கி நிறுத்தினார். இதனால் போர் பதற்றம் அதிகரித்தது.

ஈரானில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் :  சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்!

இதனிடையே ஓமன் வளைகுடாவில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நார்வே நாட்டின் எண்ணெய் கப்பல் தீ பிடித்து எரிந்தது. ‘கொக்குகா கரேஜியஸ்’ என்ற 2 எண்ணெய் கப்பல் பலத்த சேதம் அடைந்தது. இதற்கும் ஈரான்தான் காரணமாக இருக்கவேண்டும் என அமெரிக்க சந்தேகத்தை கிளப்பிவிட்டது.

அதனை நிரூபிக்கும் வேலையில் அமெரிக்க ராணுவம் இறங்கியது. இந்நிலையில், நேற்று அமெரிக்க ராணுவம் வீடியோ மற்றும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அதில் ஈரான் ராணுவ வீரர்கள், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஒரு படகில் சென்று ஜப்பானின் எண்ணெய் கப்பல் அருகே ‘லிம்பெட்’ வகை கடல் கண்ணிவெடிகளை எடுக்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோ குறித்து ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோவில் உண்மை இல்லை. ஆதாரமின்றி ஈரானை அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது என ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் :  சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்!

இந்த சூழ்நிலையில் கூடுதலாக 1,000 வீரர்களை அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளது. மேலும், இன்று ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பகுதிக்குள் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் பறந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த விமானத்தை ஈரான் காவல்படை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இது தொடர்பாக பதில் எதுவும் கூற முடியாது என்று அமெரிக்க ராணுவம் மறுத்துள்ளது.

banner

Related Stories

Related Stories