வைரல்

புகழ்பெற்ற மல்யுத்த வீரரை வீழ்த்திய வீராங்கனை... தோல்வியே சந்திக்காத இந்திய பெண்ணை கௌரவித்த Google!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனையான ஹமிதா பானுவை கூகுள், டூடுல் வெளியிட்டு கௌரவித்துள்ளது.

புகழ்பெற்ற மல்யுத்த வீரரை வீழ்த்திய வீராங்கனை... தோல்வியே சந்திக்காத இந்திய பெண்ணை கௌரவித்த Google!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உலகின் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம், ஒருவரின் சாதனைகளை கௌரவிக்கும் விதமாக டூடுல் வெளியிடும். அந்த வகையில் இன்று பெரிய உருவம் கொண்ட பெண் ஒருவரது புகைப்படத்தை தனது டூடுலாக வெளியிட்டுள்ளது. யார் அந்த பெண்? என்ன சாதனை செய்தார்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முன்காலத்தில் பிற்போக்குத்தனம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த சமயத்தில் பெண்களின் பணி என்பது, ஆண்களுக்கு சேவை புரிந்து, அவர்களுக்கு கீழே அடங்கி கிடப்பதுதான். அதனை பலரும் எதிர்த்துதான் தற்போது பெண்கள் தங்களுக்கு என்று சொந்தமாக முடிவெடுத்து வாழும் அளவிற்கு உயர்ந்துள்ளனர். பெண்களின் சுதந்திரத்தை பறித்துக்கொண்டிருந்த ஆண்கள் சமுதாயத்தில் ஒரு சில ஆண்கள், பெண்கள் பக்கமே நின்றனர்.

எனினும் பெண்களுக்கு என்று இந்த சமுதாயம் ஒரு முத்திரை பதித்து வைத்திருந்தது. அப்படி ஒரு முத்திரையை முறியடித்தவர்தான் ஹமிதா பானு என்ற பெண். ஹமிதா பானு உத்தர பிரதேசத்தின் அலிகர் பகுதியில் 1900 சமயத்தில் மல்யுத்த வீரர் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அங்கே பிறந்ததால்தான் என்னவோ, மல்யுத்தத்தில் பெரும் ஆர்வம் கொண்டுந்துள்ளார்.

புகழ்பெற்ற மல்யுத்த வீரரை வீழ்த்திய வீராங்கனை... தோல்வியே சந்திக்காத இந்திய பெண்ணை கௌரவித்த Google!

அதன் எதிரொலியாக இவர் தனது குடும்பத்தினர் உதவியுடன் கடும் பயிற்சி மேற்கொண்டார். பெண்களுக்கு எதற்கு படிப்பு? பெண்களுக்கு எதற்கு இது? பெண்களுக்கு எதற்கு அது? என்று சொல்லக்கூடிய காலத்திலும், மல்யுத்தத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று குறிக்கோளோடு தன்னை தயார்படுத்தி கொண்டார். ஒவ்வொரு முறையும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பலரது வாயையும் அடைத்து வந்துள்ளார் ஹமிதா.

இருப்பினும் அவருக்கான அங்கீகாரம் பெண் என்பதாலே மறுக்கப்பட்டு வந்தது. ஆனாலும் விடாமல் சுமார் 300-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்தார். ஒரு பெண் சாதிக்க தொடங்கிவிட்டால் அது மிகப்பெரிய அதிசயம் போல் உள்ளூர் தாண்டியும் பேசப்படும். அப்படிதான் அவரது சாதனை அனைவருக்கும் ஆச்சர்யமூட்டும் வகையில் இருந்தது.

இவரது அன்றாட பழக்க வழக்கங்களும் செய்தியாகின. அதில் முக்கியமாக இவரது உணவு பழக்கம். அதாவது ஹமிதா பானு நாளொன்றுக்கு 5.6 லிட்டர் பால், 2.8 லிட்டர் சூப், 1.8 லிட்டர் பழச்சாறு, ஒரு முழு கோழி, கிட்டத்தட்ட 1 கிலோ மட்டன் மற்றும் பாதாம் பருப்பு, அரை கிலோ வெண்ணெய், 6 முட்டைகள், இரண்டு பெரிய ரொட்டிகள் மற்றும் இரண்டு தட்டு பிரியாணி இவையெல்லாம் தனது உணவாக எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

புகழ்பெற்ற மல்யுத்த வீரரை வீழ்த்திய வீராங்கனை... தோல்வியே சந்திக்காத இந்திய பெண்ணை கௌரவித்த Google!

தனது சாதனைக்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்று தினசரியும் உடலுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் சேர்த்து பயிற்சி எடுத்து வந்துள்ளார். உருவம் தொடர்பாக ஆண்கள் மத்தியில் பல கேலிகளுக்கு உள்ளானாலும், அதற்கு எல்லாம் பதிலடியாக மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்று கேலி செய்தவர்கள் முன்னாடி தலை நிமிர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இதற்கெல்லாம் ஒரே ஒரு நாள் மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது. 1940 - 50-களுக்கு இடையே சுமார் 300 போட்டிகளில் பெற்ற இவரது வெற்றியை விட, அந்த நாள் இவரது பெயரை இன்றளவும் நிலை(னை)க்க செய்ய ஒரு காரணமாக அமைந்துள்ளது. தோற்கடிக்க மிக கடினமாக இருக்கும் ஒரு ஆண் மல்யுத்த வீரர் ஒருவருடன் போட்டியிடும் சூழல், ஹமிதாவுக்கு ஏற்பட்டது.

இதனை விட கூடாது; விட்டால், பெண்களுக்கான முறையான அங்கீகாரமும் உரிமையும் பாதிக்கப்படும் என்று எண்ணி போட்டியில் களமிறங்க ஆயத்தமானார். அந்த நாள் வந்தது. 1954, மே 4, பிரபல மல்யுத்த ஆண் வீரர் பாபா பஹல்வானுடன் (Baba Pahalwan) போட்டியிட களத்தில் இறங்கினார். சுற்றிலும் அதிகமாக ஆண்களே இருக்க, அதில் அனைவரும் பாபா பஹல்வான் வெற்றி பெற்றால் ஆணினத்திற்கே பெருமை என்று அவருக்கு உற்சாகமூட்டினர்.

தொடர்ந்து மல்யுத்த போட்டி தொடங்க இருவரும் தங்கள் பலத்தை காட்ட தொடங்கினர். ஆனால் அனைவரும் எதிர்பாரா வரலாற்று சம்பவம் நிகழ்ந்தது. பாபா பஹல்வானை வெறும் 1 நிமிடம் 34 வினாடிகளில் தோற்கடித்து பெரிய சாதனை படைத்தார் ஹமிதா பானு. இவரது சாதனை அப்போது நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது.

புகழ்பெற்ற மல்யுத்த வீரரை வீழ்த்திய வீராங்கனை... தோல்வியே சந்திக்காத இந்திய பெண்ணை கௌரவித்த Google!

அனைத்து செய்திகளிலும் ஹமிதா பானுவின் சாதனை இடம்பெற்றது. இதைத்தொடர்ந்து இவரது அன்றாட நிகழ்வுகளும் செய்திகளாக வெளியாகின. இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரரான ஹமிதா பானு, எந்த ஆண் தன்னை வீழ்த்துகிறாரோ, அவரையே திருமணம் செய்துகொள்வதாக வெளிப்படையாக சவால் விட்டார். எனினும் இறுதிவரை இவரை எந்த ஆணாலும் தோற்கடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து இவர் ரஷ்ய வீராங்கனையையும் தோற்கடித்து சாதனை படைத்தார். இப்படி அடுத்தடுத்து வெற்றிகளுக்கு சொந்தக்காரராக திகழ்ந்த ஹமிதா, தனது வாழ்வின் இறுதி காலத்தை மிகவும் மோசமான முறையில் கழித்துள்ளார். பல ஆண்டுகளாக இவர் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்காமல் இருந்துள்ளார். இவர் தொடர்பாக BBC செய்தி ஒன்றையும் வெளியிட்டது.

அதில் ஹமிதா, தனது போட்டிக்காக ஐரோப்பா செல்வதாக இருந்தது. ஆனால் அவரது பயிற்சியாளர் சலாம் பஹல்வான் என்பவர் ஒருமுறை அவரை கம்பு குச்சிகளால் கடுமையாக தாக்கியுள்ளார். அதில் இவரது காலில் பலமான காயம் ஏற்பட்டு, அதிலிருந்து குணமாக பல ஆண்டுகள் ஆகியுள்ளது. இதனால் இவர் மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

தனது வாழ்வின் இறுதி நாளில், ஒரு சிறுவனை தத்தெடுத்து, தனது மகன் போல் வளர்த்து வந்துள்ளார். மகாராஷ்டிராவில் வாழ்ந்து, அங்கேயே பால் விற்பனை, தின்பண்டங்கள் விற்பனை உள்ளிட்டவையை செய்து காலத்தை கழித்து வந்துள்ளார் ஹமிதா.

இருப்பினும் தற்போது வரை இவரது சாதனை பலராலும் நினைவு கூற முடிகிறது. அதன்படி முதன்முறையாக பிரபல ஆண் மல்யுத்த வீரரை தோற்கடித்த நாளான இன்று (மே 4) ஹமிதாவை நினைவுகூறும் விதமாக, கூகுளின் டூடுல் இவரது புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. இந்த டூடுலை பெங்களூருவைச் சேர்ந்த பெண் கலைஞர் திவ்யா நேகியா என்பவர் உருவாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories