வைரல்

வைரலாகும் புதுச் செய்தி: குடும்ப வாழ்க்கைக்கும் அயோத்திக்கும் எப்போதுமே ஆகாது போல!

மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து, நல்ல வருமானம் பெரும் கணவர், தேன் நிலவு சுற்றுலாக்காக அயோத்தி கூட்டி சென்றதால் மனைவி எடுத்த திடீர் முடிவு.

வைரலாகும் புதுச் செய்தி: குடும்ப வாழ்க்கைக்கும் அயோத்திக்கும் எப்போதுமே ஆகாது போல!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஒரு பெண்.

திருமணமாகி ஐந்து மாதங்கள்தான் கழிந்திருக்கிறது. இன்னும் தேனிலவுக்கு செல்லவில்லை. வெளிநாட்டுக்கு தேனிலவு செல்லலாம் என காதலுடன் கணவனிடம் தெரிவிக்கிறார். ஆனால் கணவர் ஒப்புக் கொள்ளவில்லை.

காரணம், கணவரின் வயது முதிர்ந்த பெற்றோரை விட்டு வெகுதூரத்துக்கு செல்ல முடியாது என்கிறார். உள்நாட்டிலேயே எங்கேனும் செல்லலாம் என அவர் சொல்ல, கணவருக்காக பெண்ணும் ஒப்புக் கொள்கிறார். கோவாவுக்கு செல்லலாமென மனைவி விருப்பம் தெரிவிக்க, கணவரும் ஒப்புக் கொள்கிறார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக, கணவர் திட்டத்தை மாற்றி விடுகிறார்.

ராமர் கோவில் திறப்புக்கு முன் அயோத்தியாக்கு செல்வதென கணவர் முடிவெடுக்கிறார். பயணத்துக்கு முதல் நாள்தான் தகவலை மனைவிக்கு தெரிவிக்கிறார். அவருக்கோ அதிர்ச்சி. ஆனாலும் கணவரின் விருப்பத்துக்கு இணங்கி அயோத்தி சென்று திரும்புகிறார்.

பத்து நாட்கள் கழிகின்றன. அந்த பெண் கிளம்புகிறார். இம்முறை வெளியூருக்கு அல்ல, குடும்ப நல கோர்ட்டுக்கு! சென்று விவாகரத்து மனு தாக்கல் செய்கிறார். தேனிலவுக்கு கோவாவுக்கு அழைத்து செல்வதாக சொல்லி அயோத்திக்கு கணவன் அழைத்து சென்றதை காரணமாக சொல்கிறார்.

இப்படி ஒரு சம்பவம் போபாலில் நடந்திருப்பதாக வட இந்திய ஊடகங்கள் செய்தி அளித்திருக்கின்றன. இதில் எந்தளவு உண்மை இருக்கிறதென தெரியவில்லை. ஆனால் அயோத்திக்கு சென்ற பிறகுதான், ராமரும் சீதையுமே பிரிந்ததாக ராமாயணம் கூறுகிறது. அக்கோவிலை திறந்து வைத்தவரும் ராமராஜ்ஜியத்தை நம்பி மனைவியை பிரிந்தவர்தான்.

இப்போது புதிதாக இப்படியொரு வழக்கு!

காலம் மாறினாலும் ராமராஜ்ஜிய துயரங்கள் மட்டும் மாறாதுபோல!

banner

Related Stories

Related Stories