இந்தியா

விவாகரத்து அதிகம் பெரும் நாடுகள்.. இந்தியாவிற்கு கிடைத்த இடம் என்ன தெரியுமா ? - ஆய்வில் வெளியான தகவல்!

உலகிலேயே விவகாரத்து அதிகம் பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா கடைசி இடத்தை பிடித்துள்ளது.

விவாகரத்து அதிகம் பெரும் நாடுகள்.. இந்தியாவிற்கு கிடைத்த இடம் என்ன தெரியுமா ? - ஆய்வில் வெளியான தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருமணம் என்பதுதான் பலரது வாழ்வில் தொடக்க புள்ளியாக அமையும். அத்தகைய குடும்ப வாழ்க்கையில் பலர் கடைசி காலம் வரை ஒன்றாக பயணிப்பாளர்கள். சிலர் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வேறொரு துணையுடன் சென்றுவிடுவார்கள். சிலர் தனியாகவே வாழ்ந்து, வாழ்க்கை கடத்துவார்கள்.

இந்தியா போன்ற மத பழக்க வழக்கங்களை அதிகம் பின்பற்றும் நாடுகளில் திருமணம் என்பது புனிதமாக பார்க்கப்படுகிறது. ஆனால் மேலை நாடுகளில் அதன் பழக்கவழக்கமே வேறாக இருக்கிறது. அங்கு பிடித்த வாழ்க்கையை இருவருமே தேடிக்கொள்ளும் உரிமை சர்வசாதரனமாக கிடைக்கின்றது. அதனாலேயே அங்கு விவாகரத்து என்பது அதிகம் நடக்கும்.

விவாகரத்து அதிகம் பெரும் நாடுகள்.. இந்தியாவிற்கு கிடைத்த இடம் என்ன தெரியுமா ? - ஆய்வில் வெளியான தகவல்!

அந்தவகையில் சமீபத்தில் வெளியான ஆய்வில், விவாகரத்தை அதிகம் பெறும் நாடுகளில் ஐரோப்பா நாடு் முதலிடத்தில் உள்ளது. பட்டியலில் ஐரோப்பாவின் போர்ச்சுக்கலில் 94 சதவீதம் விவாகரத்து நடந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதற்கு அடுத்தப்படியாக ஸ்பெயின் (85%) உள்ளது. அதேபோன்று, பெல்ஜியம் (79%), ரஷ்யா(73%), உக்ரைன்(70%) அடுத்தடுத்த இடத்தில் உள்ளது. அமெரிக்கா (41%) மற்றும் கனடா (47%) 50 சதவீதக்கும் குறைவாக உள்ளது. இதில் இந்தியா தான் மிகக் குறைந்த அளவில் உள்ளது. அதாவது இந்தியாவில் விவாகரத்து பெறும் எண்ணிக்கை வெறும் 1 சதவீதமாக உள்ளது.

விவாகரத்து அதிகம் பெரும் நாடுகள்.. இந்தியாவிற்கு கிடைத்த இடம் என்ன தெரியுமா ? - ஆய்வில் வெளியான தகவல்!

இதுகுறித்து வல்லுனர்கள் கூறுகையில், இந்தியாவில் 1% மட்டுமே விவகாரத்து பெறுவதற்கு இந்தியாவின் சட்டமே காரணம் என்று கூறுகின்றனர். மேலும் இந்து, ஜெயினர்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்டோர் இந்து மத சட்டத்தின் அடிப்படையில் விவகாரத்து பெருகின்றனர். அதேபோல் 1939ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் விவாகரத்த் மெறுகின்றனர் என்று கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories