வைரல்

கோபி மஞ்சூரியன் சாப்பிட்ட நகை கடை ஊழியர்.. ரூ.500 அபராதம் விதித்த மெட்ரோ நிர்வாகம் ! - பின்னணி என்ன ?

கோபி மஞ்சூரியன் சாப்பிட்ட நகை கடை ஊழியர்.. ரூ.500 அபராதம் விதித்த மெட்ரோ நிர்வாகம் ! - பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் மெட்ரோ இரயில் சேவை இயங்கி வருகிறது. முக்கியமாக டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை என பல பகுதியில் இயங்கி வருகிறது. மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை மெட்ரோ இரயில் நிர்வாகம் விதித்துள்ளது. அதில் முக்கியமான ஒன்றுதான் மெட்ரோ இரயிலுக்குள் உணவு சாப்பிடக் கூடாது.

பொதுவாக லோக்கல் இரயிலில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இருப்பதில்லை. எனவே காலையில் பயணிக்கும் மக்கள் சிலர், நேரமாகும் என்பதால், தங்கள் காலை உணவை எடுத்து வந்து இரயிலில் பயணிக்கும்போது உண்ணுவர். இதற்கு எந்தவித தடையும் இல்லை. ஆனால் மெட்ரோ இரயிலுக்கும் இதுபோன்ற செயலுக்காக தடையுள்ளது.

கோபி மஞ்சூரியன் சாப்பிட்ட நகை கடை ஊழியர்.. ரூ.500 அபராதம் விதித்த மெட்ரோ நிர்வாகம் ! - பின்னணி என்ன ?

அதே போல், மெட்ரோ இரயிலுக்குள் வெளியில் அனைவர்க்கும் கேட்கும்விதமாக சத்தமாக பாட்டு கேட்கக்கூடாது, உணவு, பண்டப்பொருட்கள் எதையும் சாப்பிடக்கூடாது போன்ற விதிகள் உள்ளது. ஆனால் இதனை மீறும் விதமாக ஒருவர் மெட்ரோ இரயிலுக்குள் வைத்து கோபி மஞ்சூரியன் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு மெட்ரோ நிர்வாகம் ரூ.500 அபராதம் விதித்துள்ளது.

பெங்களூருவில் உள்ள ஜெயநகரில் இருக்கும் நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருபவர் சுனில் குமார். இவர் வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மெட்ரோ இரயிலுக்குள் அமர்ந்து தான் வாங்கி வந்த கோபி மஞ்சூரியன் உணவை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து இதுகுறித்து அருகில் இருந்தவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து சுனில் குமாரை அடையாளம் கண்ட மெட்ரோ நிர்வாகம் உடனடியாக அவரை கடந்த செவ்வாய்கிழமை ஜெயநகர் மெட்ரோவில் இருந்து இறங்கியதும், அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். அங்கே அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தனர் போலீசார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories