வைரல்

நிலவில் ஆக்ஸிஜன், சல்பர் கண்டுபிடிப்பு.. ஹைட்ரஜன் உள்ளதா? : தீவிரமாக ஆய்வு செய்யும் பிரக்யான் ரோவர்!

நிலவின் தென்பகுதியில் ஆக்ஸிஜன் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரோ உறுதியுடன் தெரிவித்துள்ளது.

நிலவில் ஆக்ஸிஜன், சல்பர் கண்டுபிடிப்பு..  ஹைட்ரஜன் உள்ளதா? : தீவிரமாக ஆய்வு செய்யும் பிரக்யான் ரோவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. பூமியின் நீள்வட்டப் பாதையில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3ன் உயரம் 5 கட்டங்களாக படிப்படியாக உயர்த்தப்பட்டு, ஆகஸ்ட் 1ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை நோக்கி ஊந்தப்பட்டது.

பின்னர் ஆகஸ்ட் 5ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது. ஆகஸ்ட் 17ஆம் தேதி உந்துவிசைக் கலனிலிருந்து விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள லேண்டர் தனியாகப் பிரிக்கப்பட்டது. ஏற்கனவே நிலவின் சுற்றுப்பாதையில் இயங்கி வரும் சந்திரயான் 2-ன் ஆர்பிட்டரின் தகவல் தொடர்பு அமைப்புடன் விக்ரம் லேண்டர் இணைக்கப்பட்டது. பின்னர் லேண்டரின் உயரம் படிப்படியாகக் குறைக்கப்பட்டது.

நிலவில் ஆக்ஸிஜன், சல்பர் கண்டுபிடிப்பு..  ஹைட்ரஜன் உள்ளதா? : தீவிரமாக ஆய்வு செய்யும் பிரக்யான் ரோவர்!

இதையடுத்து ஜூலை 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றி கரமாகத் தரையிறங்கியது. இந்த வரலாற்று வெற்றியை நாடே கொண்டாடியது. பின்னர் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வரும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து ரோவர் நிலவில் ஆய்வு செய்யும் வீடியோவும் வெளிவந்தது.

இந்நிலையில், நிலவின் தென் துருவத்தில் அலுமினியம் (Al), சல்பர் (S), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr) மற்றும் டைட்டானியம் (Ti),மாங்கனீசு (Mn), சிலிக்கான் (Si) மற்றும் ஆக்ஸிஜன் (O) உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரோ உறுதியுடன் தெரிவித்துள்ளது. மேலும் நிலவில் ஹைட்ரஜன் உள்ளதா? பிரக்யான் ரோவர் ஆய்வு செய்து வருகிறது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories