வைரல்

ஏ.. எப்புட்றா.. புலியை பார்த்து பதுங்கிய வாத்து.. விழி பிதுங்கி நின்ற புலி.. இணையத்தை கலக்கும் வீடியோ !

புலியை பார்த்து பதுங்கிய வாத்தை தேடி விழி பிதுங்கி நின்ற புலியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏ.. எப்புட்றா.. புலியை பார்த்து பதுங்கிய வாத்து.. விழி பிதுங்கி நின்ற புலி.. இணையத்தை கலக்கும் வீடியோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இணையத்தில் நாள்தோறும் பல வீடியோக்கள் வைரலாகி வரும். அதிலும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் பலரது மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வரும். விலங்குகளின் மூர்க்கத்தனமான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தும் நிலையில், அவைகளின் வெகுளித்தனமான வீடியோக்கள் வெளியாகி அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெரும்.

ஏ.. எப்புட்றா.. புலியை பார்த்து பதுங்கிய வாத்து.. விழி பிதுங்கி நின்ற புலி.. இணையத்தை கலக்கும் வீடியோ !

பொதுவாக சிங்கம், புலி போன்ற விலங்குகள் மூர்கத்தனத்தை மட்டுமே வெளிப்படுத்தும். ஆனால் அவைகளின் குழந்தை தனமும் வெகுளித்தனமும் வெளிப்படுத்துவது தொடர்பாக வெளியாகும் செய்திகள் சிலவற்றையே. தற்போதும் அதுபோல் ஒரு நிகழ்வின் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் காட்டு பகுதியில் புலிகள் இருக்கிறது. அதன் அருகே குளம் ஒன்றும் உள்ளது. அங்கே வாத்து ஒன்று நீந்துகிறது. இதனை கண்ட புலி ஒன்று மெதுவாக அதன் அருகே செல்ல நினைக்கிறது. புலி தனது அருகே வருவதை உணர்ந்த அந்த வாத்து, புத்திசாலி தனமாக தண்ணீருக்குள் மூழ்கி மறைந்து கொள்கிறது. இதனை கண்ட புலி "எங்கடா போச்சு.." என்பது போல் விழிபிதுங்கி பார்க்கிறது.

மேலும் அந்த வாத்தை தேடுகிறது. சுற்றி முற்றிலும் தேடிய பின் அந்த வாத்து அங்கில்லை என்று நினைத்து மீண்டும் கரைக்கே செல்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி புத்திசாலி வாத்துக்கு சார்பாக கருத்துகளும், விழி பிதுங்கி நின்ற புலிக்கு சாதகமாகவும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories