வைரல்

அர்ஜுன் டெண்டுல்கருக்கு நாய் கடி.. லக்னோ அணி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ என்ன?

தன்னை நாய் கடித்ததாக அர்ஜுன் டெண்டுல்கர் சக வீரரிடம் தெரிவித்துள்ள வீடியோவை லக்னோ அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அர்ஜுன் டெண்டுல்கருக்கு நாய் கடி..  லக்னோ அணி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். இவர் நடப்பு ஐ.பி.எல் தொடரின் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தந்தை தேர்ந்தெடுத்த அதே கிரிக்கெட்டை மகன் தேர்வு செய்தாலும் இவர் பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளார். 2018ம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். அதேபோல் U-19லும் இந்தியா அணியில் விளையாடியுள்ளார்.

தற்போது நடப்பு ஐ.பி.எல் தொடரில் அறிமுகமாகி மும்மை அணியில் விளையாடி வருகிறார். இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று இரு அணிவீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது மைதானத்தில் இருந்து அர்ஜுன் டெண்டுல்கரிடம் லக்னோ வீரர் யுத்வீர் சிங் சரக் 'எப்படி இருக்கிறாய்' என விசாரித்தார். இதற்கு அர்ஜுன், 'நலமாக இருக்கிறேன். நாய் கடித்து விட்டது' என்கிறார். இதற்கு அவர் 'நாயா? எப்போது?' என கேட்கிறார். இதற்கு அர்ஜுன் 'நேற்று' என்று பதில் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை லக்னோ அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories