வைரல்

சாக்கடை கால்வாயில் கட்டுக் கட்டாக கிடந்த ரூ.2000 நோட்டு: கழிவுநீரில் குதித்து அள்ளிச்சென்ற பொதுமக்கள்!

பீகாரில் சாக்கடை கால்வாயில் கிடந்த ரூ.2000 நோட்டு கட்டுகளைப் பொதுமக்கள் அள்ளிச்சென்ற வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சாக்கடை கால்வாயில் கட்டுக் கட்டாக கிடந்த ரூ.2000 நோட்டு:  கழிவுநீரில் குதித்து அள்ளிச்சென்ற பொதுமக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலம் பட்னா அருகே சசாராம் என்ற பகுதி உள்ளது. இங்குச் சாக்கடை கால்வாய் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்திற்கு அடியில் ரூ.500, ரூ.2000 நோட்டுகள் கட்டுக் கட்டாக இருந்துள்ளது.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது கள்ளநோட்டாக இருக்கக் கூடும், இவ்வளவு பணத்தை யார் சாக்கடையில் வீசிச் செல்வார்கள் என நினைத்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் கால்வாயில் இறங்கி பணத்தை எடுத்துப் பார்த்துள்ளனர்.

இவர்கள் பணம் எடுப்பதைப் பார்த்த மற்றவர்களும் உடனே கால்வாயில் குதித்து ரூ.500,ரூ,2000 நோட்டுகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர். கால்வாயில் பணம் இருக்கும் செய்து அறிந்து அங்கு அதிகமான மக்கள் கூடியுள்ளனர்.

பின்னர் இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவர்களை விரட்டியடித்துள்ளனர். மேலும் கால்வாயிலிருந்த பணம் உண்மையான நோட்டுதானா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கால்வாயிலிருந்த பணம் கள்ளநோட்டு இல்லை என்றும் சிலர் அது கள்ள நோட்டுதான் எனவும் கூறுகின்றனர். இதனால் போலிஸார் குழப்பமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த பணத்தைக் கால்வாயில் வீசி சென்றது யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாக்கடை கால்வாயில் கட்டுக் கட்டாக கிடந்த ரூ.2000 நோட்டு:  கழிவுநீரில் குதித்து அள்ளிச்சென்ற பொதுமக்கள்!

இது குறித்து அப்பகுதி மக்கள் ஒருவர் கூறுகையில், "கால்வாயில் பணம் மிதப்பதைக் கண்டேன். அது போலியான பணமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் சிறிது நேரத்தில் மக்கள் கால்வாயில் இறங்கி பணத்தை எடுத்துச் சென்றனர்" என தெரிவித்துள்ளார். இந்நிலையில் கால்வாயில் இறங்கி பணத்தை பொதுமக்கள் எடுத்துச் செல்லும் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories