வைரல்

கல்யாண Dress, போட்டோஸ் எரிப்பு.. தாயின் உதவியோடு விவகாரத்தை கொண்டாடிய பெண்.. அப்படி என்னதான் செஞ்சாரு?

இளம்பெண் ஒருவர் தனது விவகாரத்தை திருமண போட்டோஸ், ட்ரெஸ்ஸை எரித்து கொண்டாடியுள்ள நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

கல்யாண Dress, போட்டோஸ் எரிப்பு.. தாயின் உதவியோடு 
விவகாரத்தை கொண்டாடிய பெண்.. அப்படி என்னதான் செஞ்சாரு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அமெரிக்காவை சேர்ந்தவர் லாரன் புரூக். 31 வயதான இந்த இளம்பெண்ணுக்கு கடந்த 2012-ல் இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது.

கல்யாண Dress, போட்டோஸ் எரிப்பு.. தாயின் உதவியோடு 
விவகாரத்தை கொண்டாடிய பெண்.. அப்படி என்னதான் செஞ்சாரு?

இருவருக்குள் இருக்கும் இந்த சண்டை நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்பட்டது. இதையடுத்து இருவரும் மனது ஒப்ப பிரிய எண்ணியுள்ளனர். இதனால் கடந்த 2021-ல் செப்டம்பர் மாதம் இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் விவாகரத்து கோரி மனு தாக்கலும் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை தீவிமராக நடைபெற்று வந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு ஜனவரி மாதம் விவாகரத்து கிடைத்துள்ளது. இதன்மூலம் இவர்கள் சட்டப்படி விவாகரத்து பெற்ற தம்பதியினர் ஆவர்.

கல்யாண Dress, போட்டோஸ் எரிப்பு.. தாயின் உதவியோடு 
விவகாரத்தை கொண்டாடிய பெண்.. அப்படி என்னதான் செஞ்சாரு?

இந்த நிலையில் இளம்பெண் லாரன் புரூக், தனது விவகாரத்தை போட்டோஷூட் நடத்தி விமர்சையாக கொண்டாடியுள்ளார் லாரன் புரூக் மேற்கொண்ட போட்டோஷூட்டில், 'Divorced' என்று பொறிக்கப்பட்டிருந்த தோரணை போன்ற ஒன்றை கையில் பிடித்திருக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் தனது திருமண ஆடை (வெள்ளை நிற Gown), போட்டோஸ் உள்ளிட்டவையை எரித்து தனது விவகாரத்தை கொண்டாடியுள்ளார்.

கல்யாண Dress, போட்டோஸ் எரிப்பு.. தாயின் உதவியோடு 
விவகாரத்தை கொண்டாடிய பெண்.. அப்படி என்னதான் செஞ்சாரு?

மேலும் திருமணத்தின் பொது எடுத்த புகைப்படத்தின் ஆல்பத்தை காலால் மிதித்தும் உள்ளார். இது தொடர்பான போட்டோஸை தனது சமூக வலைதள பக்கத்தில் லாரன் புரூக் பகிர்ந்துள்ளார். மேலும் நீள பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் "கடந்த ஆண்டு கடினமாக இருந்தது, ஆனால் நான் தப்பித்தேன். இந்த போட்டோ ஷூட், நான் நினைக்காத போது கூட அதை செய்தேன் என்பதை நினைவூட்டியது. இது சுத்த வேடிக்கையாகவும் இருந்தது!

கல்யாண Dress, போட்டோஸ் எரிப்பு.. தாயின் உதவியோடு 
விவகாரத்தை கொண்டாடிய பெண்.. அப்படி என்னதான் செஞ்சாரு?

விவாகரத்து கடினமானது, விவாகரத்து அசிங்கமானது மற்றும் நேர்மையாக நீங்கள் திருமணம் செய்துகொள்ளும் போது இது நீங்கள் கற்பனை செய்யவில்லை. நான் யாரையும் விரும்புவதில்லை, இருப்பினும் அது முடிந்துவிட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், என் வாழ்க்கையின் திசையில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், குடும்பமாக மாறிய நண்பர்கள், நான் திரும்பப் பெற்ற மகிழ்ச்சி.

கல்யாண Dress, போட்டோஸ் எரிப்பு.. தாயின் உதவியோடு 
விவகாரத்தை கொண்டாடிய பெண்.. அப்படி என்னதான் செஞ்சாரு?

எனவே இந்த அத்தியாயம் மற்றும் வரவிருக்கும் மற்ற அனைத்தும் இங்கே! பாடங்களுக்கு கடவுளுக்கு நன்றி! நான் செய்கிறேன், செய்தேன், செய்துவிட்டேன்! தினமும் காலை எழுந்ததும் அழும் நாட்கள் உண்டு, வாழ்க்கை முன்னேறவே முன்னேறாது என்று நினைத்து வருந்திய நாட்கள் உண்டு. இப்போது நான் காலையில் எழுந்து அழுவதில்லை, மிக சிறப்பாக உணர்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த போட்டோஷூட்டை அவரது தாயும் புகைப்பட கலைஞருமான பெலிசியா பெளமன் என்பவர் எடுத்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இளம்பெண் ஒருவர் தனது விவகாரத்தை திருமண போட்டோஸ், ட்ரெஸ்ஸை எரித்து கொண்டாடியுள்ள நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories