வைரல்

பல்லு தேய்க்க ரூ.12000-க்கு E-Brush ஆர்டர் செய்த பெண்.. 4 பெட்டி மசாலாவை டெலிவரி செய்த அமேசான்..

அமேசானில் 12 ஆயிரம் மதிப்புள்ள எலெக்ட்ரிக் டூத்பிரஷ் ஆர்டர் செய்த பெண்ணுக்கு 4 பேட்டி நிறைய மசாலா பாக்கெட்டுகளை டெலிவரி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லு தேய்க்க ரூ.12000-க்கு E-Brush ஆர்டர் செய்த பெண்.. 4 பெட்டி மசாலாவை டெலிவரி செய்த அமேசான்..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்கள் பயன்படுத்துவது தற்போது அனைவருக்கும் வாடிக்கையாகிவிட்டது. இந்த இ -காமர்ஸ் தளத்தில் தங்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையுமே வாங்கி பயன்படுத்தி வருவது அதிகரித்துள்ளது.

பல்லு தேய்க்க ரூ.12000-க்கு E-Brush ஆர்டர் செய்த பெண்.. 4 பெட்டி மசாலாவை டெலிவரி செய்த அமேசான்..

இப்படி ஆர்டர் செய்து வாங்கும் போது சில நேரங்களில் நாம் ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதில் வேறு ஒரு பொருட்கள் மாற்றி வரும் சம்பவங்களும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த தவறை தடுக்க இ- காமர்ஸ் தளங்கள் முயற்சி செய்தாலும் அவர்களால் இதை தடுக்க முடியவில்லை. லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு பொம்மையும், டிரோன் கேமரா ஆர்டர் செய்தவருக்கு பொம்மை காரும், மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு காலி காலாவதியான பவுடர் டப்பாவும் டெலிவரி செய்து வருகிறது அமேசான் flipkart போன்ற நிறுவனங்கள்.

பல்லு தேய்க்க ரூ.12000-க்கு E-Brush ஆர்டர் செய்த பெண்.. 4 பெட்டி மசாலாவை டெலிவரி செய்த அமேசான்..

அந்த வகையில் தற்போது எலெக்ட்ரிக் டூத்பிரஷ் ஆர்டர் செய்த பெண்ணுக்கு 4 பேட்டி நிறைய மசாலா பாக்கெட்டுகளை டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டர் பெண் பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, "எனது தாய் ரூ.12 மதிப்புள்ள எலெக்ட்ரிக் டூத்பிரஷ் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் பெற்றது என்னவோ 4 பெட்டிகள் நிறைய மசாலா பாக்கெட்டுகள்" என்று குறிப்பிட்டு புகார் தெரிவித்துள்ளார்.

பல்லு தேய்க்க ரூ.12000-க்கு E-Brush ஆர்டர் செய்த பெண்.. 4 பெட்டி மசாலாவை டெலிவரி செய்த அமேசான்..

இது தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதே போன்ற பல்வேறு பகுதிகளில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இது இ-காமெர்ஸ் மட்டுமல்லாமல், உணவு டெலிவரி செய்யும் ஆப்களிலும் நடைபெறுகிறது.

பல்லு தேய்க்க ரூ.12000-க்கு E-Brush ஆர்டர் செய்த பெண்.. 4 பெட்டி மசாலாவை டெலிவரி செய்த அமேசான்..

அண்மையில் கூட ஆன்லைனில் இளைஞர் ஒருவர் பிரெட் பாக்கெட்டை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த10 நிமிடங்களிலேயே டெலிவரி செய்யப்பட்டது. தொடர்ந்து அதனை பிரித்து சாப்பிட எண்ணிய இளைஞர் பார்சலை பிரித்துள்ளார். அப்போது அந்த பிரெட் பாக்கெட்டுக்குள் எலி என்று உயிரோடு அங்கும் இங்கும் சுற்றி திரிந்துள்ளது. இதனை அந்த நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைதள வாயிலாக புகாராக தெரிவித்தார்.

பல்லு தேய்க்க ரூ.12000-க்கு E-Brush ஆர்டர் செய்த பெண்.. 4 பெட்டி மசாலாவை டெலிவரி செய்த அமேசான்..

அதோடு பிரிட்டனைச் சேர்ந்தவர் ஒருவர் தனது மகளுக்காக ரூ.1.2 லட்சம் மதிப்புள்ள ஒரு லேப்டாப் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு அடுத்த நாள் பார்சல் டெலிவரியாகியுள்ளது. இதைப்பிரித்துப் பார்த்தபோது அதில் லேப்டாப்பிற்கு பதில் நாய்க்கு வழங்கப்படும் பெடிகிரி உணவு டப்பா இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து இது குறித்து அமேசான் நிறுவனத்திடம் கேட்டுள்ளார். முதலில் அவர்கள் நீங்கள்தான் தவறாக ஆர்டர் செய்து இருப்பீர்கள் என கூறியுள்ளனர்.

பின்னர்தான் தங்கள் தவறை உணர்ந்த அவர்கள் பணத்தை திருப்பி அனுப்புவதாக ஒத்துக் கொண்டனர். நடந்த தவறுக்கு மன்னிப்பும் அமேசான் நிறுவனம் கேட்டுள்ளது. இந்த சம்பவம் இ- காமர்ஸ் தளத்தை பயன்படுத்துவோர் மத்தியில் மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories