வைரல்

காதல் உறவில் விரிசல் வராமல் இருக்க என்னதான் வழி?... உங்களுக்கான அட்வைஸ் இதோ!

காதலர்களுக்கு இடையிலான காதல் தீர்ந்து போக ஒரு காலத்தில் சந்தேகம், பிரிவு போன்ற காரணங்கள் இருந்தன.

காதல் உறவில் விரிசல் வராமல் இருக்க என்னதான் வழி?... உங்களுக்கான அட்வைஸ் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

Netflix-ல் Love என ஒரு தொடர் இருக்கிறது. அதில் ஒரு காட்சியில் காதலியுடன் கலவி முடித்து, படுக்கையில் இருக்கும் காதலன் அவளிடம் ‘ஐ லவ் யூ’ என்கிறான். அவள் பாதியாக ஒரு ‘உம்’மை முணங்குகிறாள். புரியாமல் காதலன் அவளைப் பார்க்க, அவள்,

"நீ ரொம்ப ஐ லவ் யூ சொல்றே.. பதிலுக்கு நானும் ஐ லவ் யூன்னு சொல்ற கட்டாயம் எனக்கு ஏற்படுது. ஸ்ட்ரெஸ் அதிகமாகுது. என்னால handle பண்ண முடியல.. நாம பிரேக்கப் பண்ணிக்கலாம்,” என சொல்லிக் கிளம்பி விடுவாள்.

அந்தக் காதலனுக்கு என்ன தவறு செய்தோம் என தெரியாது. அந்தக் காதலனைப் போலவே நாமும் அதிர்ச்சியில் அமர்ந்திருப்போம்.

காதலுக்கான பிரச்சினை இன்று பல பரிமாணங்கள் கொண்டிருக்கிறது.

ஒருகாலம் வரை நமக்கான இணை, நிரந்தரத் துணையாகவும் நம் குளிர் தணிக்கும் வெப்பமாகவும் கலவித் துணையாகவும் அரவணைப்பு நல்குபவராகவும் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. இரு தரப்பிலும் இவையே குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளாக இருந்தன.

மேலும் காதலுறவுக்கான வடிவமும் திருமண உறவுக்கான வடிவமும் ஒன்றாக மட்டுமே இருந்தன.

பிறகு காலம் மாறுகிறது. புதுச்சூழல்கள் உருவாகின்றன. கூட்டு குடும்பங்கள் அணுக் குடும்பங்கள் ஆக உடைகின்றன. குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் வேலைக்கு போகும் வாய்ப்புகள் உருவாகின்றன. அதற்கும் பின் இரு தரப்புக்குமான உலகங்கள் இரு வேறாக உருவாக்கிக் கொள்ளும் சூழலும் வாய்ப்பும் உருவாகிறது.

காதல் உறவில் விரிசல் வராமல் இருக்க என்னதான் வழி?... உங்களுக்கான அட்வைஸ் இதோ!

அந்நிய மூலதனத்துடன் அந்நிய பண்பாடுகள் வருகின்றன. தொழில்நுட்ப வெளி பெரும் சாத்தியங்களைக் கொடுக்கிறது. நுகர்வு கலாசாரம் தலைதூக்குகிறது. காதலுறவுகளில் பல விதங்கள் தோன்றுகின்றன. குடும்ப பாணிகளும் மாற்றங்களுக்கு உள்ளாகின்றன.

இந்த இடத்தில் காதலும் பல சாத்தியங்களையும் பல புதைகுழிகளையும் பல மாற்றங்களையும் உட்செரித்து வேறொரு வடிவத்தைப் பூணுகிறது.

அலுவலக வேலைக்கான நேர்காணலுக்கு செல்லும் பெண்ணை HR கேட்கும் கேள்விகளில், ‘உங்களுக்கு கல்யாணம் ஆச்சா?’, ‘கல்யாணம் ஆகி எத்தன வருஷம் ஆச்சு?’,‘கல்யாணம் ஆகலன்னா, யாரையாவது லவ் பண்றீங்களா?’, ‘குழந்தைப் பெத்துக்க ப்ளான் பண்ணி இருக்கீங்களா?’, ‘வெளியூர் அல்லது வெளிநாட்டுக்கு போய் வேலை பார்க்க முடியுமா?’ என்ற கேள்விகள் இடம்பெறுகின்றன.

ஆணுக்கு இந்த கேள்விகளில் கொஞ்சம்தான் கேட்கப்படுகிறது. ஏனெனில் திருமணம் ஆகி இருந்தாலும் ஆகியிருக்கா விட்டாலும் ஆணின் பேச்சு குடும்பத்தில் செல்லுபடியாகி விடும் என்பது நிறுவனத்துக்கு தெரியும்.

தனி நபர் வாழ்க்கைகளை, வேலைக்கான competitiveness-க்குள் நிறுவனங்கள் கொண்டு வந்துவிட்டன.

காதல் உறவில் விரிசல் வராமல் இருக்க என்னதான் வழி?... உங்களுக்கான அட்வைஸ் இதோ!

இச்சூழல் இருக்கக் கூடாது என்பதை பற்றி பேச எவரும் இல்லை.

எனவே காதலர்களுக்கு இடையிலான காதல் தீர்ந்து போக ஒரு காலத்தில் சந்தேகம், பிரிவு போன்ற காரணங்கள் இருந்தன. இன்று அதீத காதல், தனிநபர் வெளி இன்மை, பணிச்சூழலின் அழுத்தம், வேலையில் நிச்சயமின்மை, குழந்தைப் பேறு, மாற்றுக்கென இருக்கும் பல வாய்ப்புகள், நிலையான உறவு கொடுக்கக் கூடிய சுமை பற்றிய அச்சம் போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.

காதலுறவு நீடிக்க பின் என்னதான் செய்வது?

வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் ஒரு தளத்தில் இயங்கக் கூடிய, தேவைப்பட்டால் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளக் கூடிய சூழல் கொண்ட இருவர் காதலிப்பதே உகந்ததாக இன்று இருக்கிறது. அதுவே சரி என சொல்லவில்லை, உகந்தது என்கிறேன்.

காரணம், career ஆக ஒரு துறையில் இருவரும் இயங்குகையில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள முடியும். காதல் தீர்ந்து போன பின்னும் உறவில் நீடிப்பதற்கான கூடுதல் காரணம் ஒன்று இருக்கிறது. Career!

எளிமையாகச் சொல்வதெனில் இன்றைய காதலுறவுகளுக்கு காதல் மட்டும் போதுமானதாக இருப்பதில்லை.

நவதாராளவாதம் மாற்றி அமைத்திருக்கும் சமூக உறவுகளுக்குள் இன்றையக் காதலர்களும் திருமண தம்பதியும் குடும்பத்துக்குள்ளேயும் ஊழியர்களாக இருக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

நிறுவன ஊழியர்கள் ஒன்றுபடும் சங்கத்தையே உடைக்க முடிந்த முதலாளித்துவத்துக்கு குடும்பத்துக்குள்ளிருக்கும் ஊழியர்களின் ஒற்றுமையை குலைக்கவா தெரியாது?

லேசான விரிசல் ஏற்பட்டாலும் முதல் பத்திதான்.

banner

Related Stories

Related Stories