வைரல்

அதீத கற்பனை காதலுக்கு சிக்கலா? : திருச்சிற்றம்பலம் vs அலைபாயுதே.. எந்தப் படத்தின் காதல் யதார்த்தமானது?

காதலுறவு, திருமண உறவு குறித்து நிறைய கற்பனைகள் நாம் கொண்டிருக்கிறோம்.

அதீத கற்பனை காதலுக்கு சிக்கலா? : திருச்சிற்றம்பலம் vs அலைபாயுதே.. எந்தப் படத்தின் காதல் யதார்த்தமானது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

இன்றைய காதல்களுக்கு நிறைய தேவைகள் இருக்கின்றன. ஆனால் அவை என்னவென அந்தக் காதலருக்குக் கூடத் தெரிவதில்லை. இந்தக் குழப்பத்துக்கு அடிப்படையான காரணம் இரண்டு. ஒன்று கற்பனை மற்றொன்று வாய்ப்புகள்.

காதலுறவு, திருமண உறவு குறித்து நிறைய கற்பனைகள் நாம் கொண்டிருக்கிறோம். இப்படி ஓர் ஆண், இப்படி ஒரு பெண் என ஏகப்பட்ட கற்பனைகள்!

'அலைபாயுதே' படக்காட்சி ஒன்றில் இதைக் காணலாம். திருமணமாகி முதல் நாள் இரவு கழிந்த அடுத்த நாள் காலை. தூங்கிக் கொண்டிருக்கும் கார்த்திக் பாத்திரத்தின் அருகே குளித்து முடித்து ஷக்தி பாத்திரம் அமர்ந்திருக்கும். கார்த்திக் விழித்ததும் தன்னைத்தான் பார்க்க வேண்டுமென ஷக்தி அமர்ந்திருப்பாள்.

அதீத கற்பனை காதலுக்கு சிக்கலா? : திருச்சிற்றம்பலம் vs அலைபாயுதே.. எந்தப் படத்தின் காதல் யதார்த்தமானது?

அவன் விழித்து அவளைப் பார்த்து பெரிய ட்ராமா ஏதுமின்றி சோம்பல் முறித்து 'குட் மார்னிங்' எனச் சொல்லிவிட்டு 'பேப்பர் வந்துடுச்சா' எனக் கேட்பான். குளித்து அவன் விழித்துப் பார்க்கக் காத்திருந்த ஷக்திக்கு தன்னைப் பற்றி அவன் ஏதும் சொல்லவில்லை என்றதும் கோபம் வந்து எழுந்து சென்று பேப்பரை எடுத்து அடுப்புத் தீயில் பற்ற வைத்து எடுத்து வந்து "இந்தா.. சுடச்சுட நியூஸ்" என்பாள்.

காட்சி நன்றாக இருந்தாலும் காலையில் கணவன் எழுந்ததும் தன் முகத்தைப் பார்க்க வேண்டுமென்ற கற்பனைகள் பெண்கள் கொள்ளக் கூடியவையே. அதே போல மனைவி bed coffee கொடுத்து எழுப்ப வேண்டுமென ஓர் ஆண் கற்பனை செய்யலாம். அல்லது ஆண் அவ்வாறு செய்ய வேண்டுமென்ற கற்பனை பெண்ணுக்கு இருக்கலாம். இத்தகைய கற்பனை விருப்பங்கள் பொருந்திப் போவதற்கு எந்த சதவிகித வாய்ப்பும் இருப்பதில்லை.

போலவே காதலராக வருவதற்கு என சில கற்பனைகள் ஒருவர் வைத்திருக்கலாம். டிப் டாப் ஆண் அல்லது rugged ஆண், எப்போதுமே தன்னை தாங்கக் கூடிய ஆண் அல்லது அவரவர் space-ஐ மதித்து independent-ஆக இருக்க விடும் ஆண் என்றெல்லாம் விருப்பங்களுக்கு வெவ்வேறு ரகங்கள் கொண்டிருக்கலாம்.

அதீத கற்பனை காதலுக்கு சிக்கலா? : திருச்சிற்றம்பலம் vs அலைபாயுதே.. எந்தப் படத்தின் காதல் யதார்த்தமானது?

அடுத்ததாக வாய்ப்புகள்!

இன்று நமக்கு ஏராளமான வாய்ப்புகள் உண்டு. காதலை வெளிப்படையாக குறைந்தபட்சம் நகரத்திலேனும் ஒரு பகுதியில் பேசும் சூழல் இருக்கிறது. நிறைய ஆண்கள், நிறைய பெண்கள் என விதவிதமான permutation & combination உடன் கூடிய காதலர்கள் கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த வாய்ப்புகளை பரிசோதித்து உவப்பானதை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இன்று இரு பாலருக்கும் உண்டு.

முன்பெல்லாம் இத்தனை வாய்ப்புகளும் கற்பனைகளும் விருப்பங்களும் customizing சாத்தியங்களும் இருந்ததில்லை. அன்று காதல் வாய்ப்பதே சிரமம். ஏகப்பட்ட கெடுபிடி, சிந்தனை வழியாகவும் குடும்ப வழியாகவும் இருக்கும். எனவே பெரிய எதிர்பார்ப்பு இன்றி 'வாய்த்ததே காதல்' என சுருக்கமாக காதலுறவை முடித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது.

ரொம்ப சிம்பிள்.

ஏன் அருகேயே இருக்கும் ஷோபனா ஒரு சிறந்த காதல் துணை என்பது திருச்சிற்றம்பலத்துக்கு தோன்றவே இல்லை?

banner

Related Stories

Related Stories