வைரல்

எச்சரிக்கை! - சீட்டில் கிடந்த பயன்படுத்தப்பட்ட ‘condom’.. மும்பை இரயிலில் அவலம்.. முகம் சுழித்த பயணிகள் !

மும்பை இரயில் இருக்கை ஒன்றில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை இருந்துள்ள சம்பவத்தில் பயணிகள் பெரும் சங்கடத்துக்குள்ளாகினர்.

எச்சரிக்கை! - சீட்டில் கிடந்த பயன்படுத்தப்பட்ட ‘condom’.. மும்பை இரயிலில் அவலம்.. முகம் சுழித்த பயணிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இரயிலில் பயணிக்கும் பயணிகள் தங்கள் சவுகரியத்துக்கு ஏற்றார் போல் பயணிப்பர். பொதுவாக சிலருக்கு பேருந்து பிடிக்கும், சிலருக்கு இரயில் பயணம் பிடிக்கும். ஏனெனில் சீப் அண்ட் பெஸ்ட் என்று சொல்வதற்குரிய வகையில் இருப்பதுதான் இரயில்.

எச்சரிக்கை! - சீட்டில் கிடந்த பயன்படுத்தப்பட்ட ‘condom’.. மும்பை இரயிலில் அவலம்.. முகம் சுழித்த பயணிகள் !

ஆனால் வட மாநிலங்களில் உள்ள இரயில்களில் பயணித்தால் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் அதிகமாக இருக்கும். அதோடு அங்கு பான் பராக் தின்று விட்டு துப்புவது போன்ற அருவருக்கத்தக்க வகையில் சில பயணிகள் நடந்துகொள்வர். அந்த வகையில் தற்போது மும்பை இரயிலின் இருக்கையில் ஆணுறை இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது மும்பை பயணி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மும்பையிலுள்ள அம்பர்நாத் லோக்கல் இரயில் ஒன்று Currey Road-ஐ கடக்கும் போது அங்கிருந்த இருக்கை ஒன்றில் ஆணுறை இருந்துள்ளது. மேலும் அது பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. இதனை அங்கிருந்த பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் கடந்த ஜனவரி 23-ம் தேதி இரவு 9.40 மணிக்கு அந்த ஆணுறையை இரயிலின் சீட்டில் பார்த்ததாக குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து இதனை மும்பை இரயில்வே நிர்வாகம், இந்தியன் இரயில்வே, மத்திய ரயில்வே ஆகியவற்றை டேக் செய்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும்படி மும்பை இரயில்வே அதிகாரிகளுக்கு மும்பை பிரிவுக்கான மத்திய ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தால் சக பயணிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இது தற்போது இணையத்தில் வைரலாகி கண்டனங்களை எழுப்பி வருகிறது.

banner

Related Stories

Related Stories