வைரல்

“சுத்தமான காற்று வேணும்னா ரூ.2500 கொடுங்க..” : தாய்லாந்தில் காற்றை சுவாசிக்க காசு வாங்கும் விவசாயி !

தாய்லாந்தில் விவசாயி ஒருவர் தூய்மை காற்றைச் சுவாசிக்க ரூ.2500 வாங்கும் சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

“சுத்தமான காற்று வேணும்னா ரூ.2500 கொடுங்க..” : தாய்லாந்தில் காற்றை சுவாசிக்க காசு வாங்கும் விவசாயி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவது போன்று, இன்று நாம் சுவாசிக்கும் காற்றையும் காசு கொடுத்தும் வாங்கும் நிலைக்கு இன்றைய உலகம் வந்துள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை அழித்து வருவதால் இன்று உலகின் பெரிய நகரங்களில் தூய்மையான காற்றே இல்லை. நாம் எல்லோரும் மாசு அடைந்த காற்றைத்தான் சுவாசித்து வருகிறோம்.

“சுத்தமான காற்று வேணும்னா ரூ.2500 கொடுங்க..” : தாய்லாந்தில் காற்றை சுவாசிக்க காசு வாங்கும் விவசாயி !

இதனால் பலருக்கும் புற்றுநோய் போன்ற பல பிரச்சனைகள் எழுந்து வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த காற்றின் மாசு அதிகரித்தே வருகிறது. இப்படியே சென்றால் சுத்தமான காற்றே இருக்காது என எச்சரிக்கப்பட்டு வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் மரங்களின் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு மரங்களை நடவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

“சுத்தமான காற்று வேணும்னா ரூ.2500 கொடுங்க..” : தாய்லாந்தில் காற்றை சுவாசிக்க காசு வாங்கும் விவசாயி !

இப்போதே பல நாடுகளில் ஆக்சிஜன் கேன் விற்கப்பட்டு வருகிறது. இதை வசதிபடைத்தவர்கள் வாங்கி பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது பண்ணையில் இருந்து கிடைக்கும் தூய்மையான காற்றைச் சுவாசிக்க ரூ.2500 கட்டணம் வசூலித்து வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் டசிட் கச்சாய். விவசாயியான இவரது பண்ணை பு லென் கா தேசிய பூங்கா அருகே உள்ளது. இப்பகுதி காடுகள் மற்றும் மலை நீரோடைகளுக்குப் பெயர் பெற்றது. இங்குத் தூய்மையான காற்று உள்ளது. இதனால், தனது பண்ணைக்கு வருபவர்களிடம் ரூ.2500 பணம் வசூலித்து வருகிறார்.

“சுத்தமான காற்று வேணும்னா ரூ.2500 கொடுங்க..” : தாய்லாந்தில் காற்றை சுவாசிக்க காசு வாங்கும் விவசாயி !

இது குறித்துக் கூறும் விவசாயி டசிட் கச்சாய், "எனது பண்ணையில் தூய்மையாகவும் சுத்தமாகவும் காற்று கிடைக்கிறது. இது நகரத்தின் புகை மூட்டத்தில் இருந்து தப்பிக்க உதவும்.

தாய்லாந்தில் காற்று மாசுபாடு ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. காற்று மாசுவால் ஆயிரக்கணக்கான மக்கள் நோயாளிகளாக மாறியுள்ளனர். இதைத் தடுக்கும் விதமாகவும், மக்களுக்கு நல்ல காற்று கிடைக்கும் நோக்கத்தில் எனது பண்ணைக்கு வருபவர்களிடம் ரூ.2500 வசூலித்து வருகிறேன்.

மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எங்கள் பண்ணையில் அனுமதி இலவசம். இயற்கையின் மீது கொண்ட அக்கறையாலும், மனிதர்களுக்குக் காற்று மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இப்படிச் செய்து வருகிறேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories