வைரல்

பாகிஸ்தான் to ஆப்பிரிக்கா.. ரூ.300ல் தொடங்கி லட்சத்தில் சம்பாதிக்கும் யூடியூபர்.. யார் இந்த புவனி தரன்?

முதலில் சொந்தமாக வாங்கிய ராயல் என்ஃபீல்ட் பைக்கில் தமிழ்நாட்டில் ஊட்டி, கல்லணை என சின்னச் சின்ன பகுதிக்கு சுற்றி வீடியோ எடுத்துள்ளார்.

பாகிஸ்தான் to ஆப்பிரிக்கா.. ரூ.300ல் தொடங்கி லட்சத்தில் சம்பாதிக்கும் யூடியூபர்.. யார் இந்த புவனி தரன்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் புவனி தரன். இவர் Tamil Tracker என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். 9ம் வகுப்பு மட்டுமே படித்த புவனி தரன் தற்போது வரை ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகள் என சுற்றி அவற்றை தனது யூடியூப் சேனலில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.

இவர் பயணம் மேற்கொள்ளும் நாடுகளில் அந்த அவர்களுடையே கலச்சாரத்தை பின்பற்றி வீடியோ வெளியிடுவதே இவரின் தனிச் சிறப்பு என்ற கூறப்படுகிறது. மேலும் உலக மக்களோடு பேசுவதற்கு மொழி ஒரு தடை இல்லை என்பதை நிருபித்து காட்டியிருக்கிறார் புவனி தரன்.

சமீபத்தில் பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்த புவனி தரன் பல்வேறு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த சில முக்கிய தகவல் இதோ...

பாகிஸ்தான் to ஆப்பிரிக்கா.. ரூ.300ல் தொடங்கி லட்சத்தில் சம்பாதிக்கும் யூடியூபர்.. யார் இந்த புவனி தரன்?

முதலில் சொந்தமாக வாங்கிய ராயல் என்ஃபீல்ட் பைக்கில் தமிழ்நாட்டில் ஊட்டி, கல்லணை என சின்னச் சின்ன பகுதிக்கு சுற்றி வீடியோ எடுத்துள்ளார். பின்னர் வெளியூர் சென்று பயணத்தை தொடங்கியுள்ளார். சில தினங்களில் அவரது பைக் காணாமல் போக வீட்டில் சில மாதங்கள் முடங்கியுள்ளார்.

அதன் பின்னர் பயணத்தின் மீது ஈர்ப்புக் காரணமாக சில நண்பர்கள் மற்றும் ஆன்லைன் உதவியுடன் பட்ஜெட் பயணங்களைத் தெரிந்துக்கொண்டு, பயணிக்க ஆரம்பித்தார். அதனை யூடியூப் சேனலில் வெளியிடுவது என முடிவு செய்து Tamil Tracker யூடியூப் சேனலையும் தொடங்கியுள்ளார்.

அதன்படி தனது முதல்பயணத்தை தஞ்சாவூர் முதல் மணாலி என திட்டமிட்டு 7 நாட்கள் பயணமாக சென்றுள்ளார். மணாலி குளிரில் செருப்பு மட்டும் போதாது என டிரைவர் சொல்ல ஷூ வாங்கிவிட்டுச் சென்றுள்ளார்.

பாகிஸ்தான் to ஆப்பிரிக்கா.. ரூ.300ல் தொடங்கி லட்சத்தில் சம்பாதிக்கும் யூடியூபர்.. யார் இந்த புவனி தரன்?

230 ரூபாய் என ஒருநாளைக்கு தனது பயணத்தினர்காக செலவு செய்துள்ளார் புவனி தரன். பின்னர் தொடர்ச்சியான பயணம் அவரை முழுநேரமாக மாற்றியதால், வீடியோ வெளியிட்டு அதில் வரும் லாபத்தை வைத்து 7 நாள் பயணம் 60 நாட்கள் வரை சென்றதாக தெரிவித்திருக்கிறார்.

லிப்ட் கேட்டு, கிடைக்கும் உணவை சாப்பிட்டு பெட்ரோல் பங்கு, பேருந்து நிலையம் என பல இடங்களில் தங்கி தனது பயணத்தை மேற்கொண்டார். மேலும் தனது 60 நாள் பயணத்தில் 0 நாட்களில், மணாலி, டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா இறுதியாக சென்னை வந்தடைந்தார்.

மேலும் பாகிஸ்தான் குருத்வாரா கோயிலுக்குச் செல்ல இந்தியா - பாகிஸ்தான் எல்லையைத் திறந்த போது டேரா டாபா நானக் வழியாக பாகிஸ்தான் சென்று முதல் சர்வதேச பயணத்தை பதிவு செய்த வேளையில், யூடியூப் பக்கமும் புதிய திருப்பதை தொடர்ந்தது.

பாகிஸ்தான் to ஆப்பிரிக்கா.. ரூ.300ல் தொடங்கி லட்சத்தில் சம்பாதிக்கும் யூடியூபர்.. யார் இந்த புவனி தரன்?

கொரோனா காலத்தில் முடங்கி இருந்த புவனி தரன், கட்டுப்பாடு நீங்கிய பின்னர் ஆப்பிரிக்கப் பயணத்தை மேற்கொண்டார். கென்யா, உகாண்டா, எத்தியோபியா, துபாய், உஸ்பெகிஸ்தான், தான்சானியா, எகிப்து ஆகிய நாடுகளுக்குப் பயணித்துள்ளார்.

ஆப்பரிக்காவில் பயணிக்கும் போது பூர்வகுடி பழங்குடின மக்களுடம் பழகி பெரும் வரவேற்பை பெற்றார். தனது யூடியூப் தொடங்கப்பட்ட போது 300 ரூபாய் தான் பட்ஜெட். ஆனால் இன்று அவரது செலவில் 75 சதவீதம் யூடியூப் சேனலில் மூடம் வரும் வருமானத்தில் எடுத்துவிட்டு, லட்சத்தில் சம்பாதிக்கிறார் புவனி தரன்.

banner

Related Stories

Related Stories