வைரல்

Wedding Photoshoot: தம்பதிகளுக்கிடையே குட்டியுடன் வந்த குரங்கு.. என்ன செய்தது தெரியுமா? நெகிழ்ச்சி video!

ஜோடி ஒன்று Wedding Photoshoot எடுத்துக்கொண்டிருக்கும் குரங்கு ஒன்று தனது குட்டியுடன் வந்து மணமகன் மீது ஏறியது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wedding Photoshoot: தம்பதிகளுக்கிடையே குட்டியுடன் வந்த குரங்கு.. என்ன செய்தது தெரியுமா? நெகிழ்ச்சி video!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள காலகட்டத்தில் திருமணத்தின்போது, அதற்கு முன்போ அல்லது பின்போ ஜோடிகள் Photoshoot எடுப்பது வழக்கமாக உள்ளது. அதனை தங்கள் முக்கியமான ஞாபகங்களாக கருதுகின்றனர். இப்படி தம்பதிகள் Photoshoot எடுக்கும்போது பல சுவாரஸ்ய நிகழ்வுகளும், சில கோரமான நிகழ்வுகளும் நிகழ்கிறது.

அந்த வகையில் சில தம்பதிகள் ஆற்றங்கரையில் நின்றோ, மலையில் நின்றோ போட்டோஷூட் செய்யும்போது தவறி உயிரிழந்த விவகாரங்களும் உள்ளது, அதே போல் போட்டோஷூட்டின்போது விலங்குகள் செய்யும் காமெடிகளும் உள்ளது.

Wedding Photoshoot: தம்பதிகளுக்கிடையே குட்டியுடன் வந்த குரங்கு.. என்ன செய்தது தெரியுமா? நெகிழ்ச்சி video!

இந்த நிலையில் தற்போது ஜோடி ஒன்று Wedding Photoshoot எடுத்துக்கொண்டிருக்கும் குரங்கு ஒன்று தனது குட்டியுடன் வந்து மணமகன் மீது ஏறியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, வெளிநாட்டை சேர்ந்த தம்பதி ஒருவர் பூங்காவில் போட்டோஷூட் செய்து கொண்டிருந்தனர். அப்போது மணமகன், மணமகளை தூங்கிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் குரங்கு ஒன்று தனது குட்டியுடன் அங்கே வந்தது. இதனால் மணமகன், மணமகளை இறக்கிவிட்டு, இருவரும் மெதுவாக நகர, அந்த குரங்கு மணமகனின் கையை பிடித்தது.

பின்னர், அது மணமகன் மீது ஏறியது. மேலும் அவரது இடுப்பில் தனது குட்டியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தது. இதனை கண்ட மணப்பெண்ணோ மகிழ்ச்சியடைந்தார். இருவரும் சிரித்தபடி அந்த குரங்குகளுடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். இதையடுத்து குரங்கு அங்கிருந்து நகர்ந்துவிட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக கேரளாவில் போட்டோஷூட் செய்துகொண்டிருந்த ஜோடி மீது, பின்னால் நின்றுகொண்டிருந்த யானை ஒன்று மட்டையை தூக்கி வீசியது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories