வைரல்

Hulk Hand.. 2 கையும் 8 கிலோ: அரியவகை நோயால் பாதித்த 16 வயது சிறுவனை ஒதுக்கிவைத்த கிராமம்!

ஜார்கண்டில், அரிய வகை நோயால் 16 வயது சிறுவன் கைகள் இரண்டும் 8 கிலோ வரை வளர்ந்துள்ளது.

Hulk Hand.. 2 கையும் 8 கிலோ: அரியவகை நோயால் பாதித்த 16 வயது சிறுவனை ஒதுக்கிவைத்த கிராமம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜார்கண்ட் மாநிலம், பொகாரோ ஸ்டீல் சிட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த16 வயதான சிறுவன் முகமது கலீம். இவர் மேக்ரோடாக்டிலியால் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் சிறுவனின் ஒரு கை எட்டு கிலோ எடை உள்ளது. மேலும் சிறுவனின் ஐந்து விரல்களும் பெரிது, சிறிது என ஒரு பேயின் விரல்களைப் போல் காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக கிராம மக்கள் சிறுவனை :பிசாசின் குழந்தை' என கூறுகின்றனர்.

Hulk Hand.. 2 கையும் 8 கிலோ: அரியவகை நோயால் பாதித்த 16 வயது சிறுவனை ஒதுக்கிவைத்த கிராமம்!

இதனால், சிறுவனுடன் யாரும் பழகுவது இல்லை. மேலும் சிறுவனைப் பார்த்து மற்றவர்கள் பயந்ததால் அவரை பள்ளிக்கு அனுப்புவதையே பெற்றோர்கள் நிறுத்திவிட்டனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவனை அவரது தந்தை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிறுவனின் பிரச்சனை சரியாகவில்லை. இதற்குப் பிறகுதான் சிறுவனின் விரல்கள் பெரிதாக வளர்ந்தது.

Hulk Hand.. 2 கையும் 8 கிலோ: அரியவகை நோயால் பாதித்த 16 வயது சிறுவனை ஒதுக்கிவைத்த கிராமம்!

தற்போது சிறுவன் முகமது கலீம் சாப்பிடுதவற்கும், குளிப்பதற்கும் கூட மற்றவர்கள் உதவியை நாடவேண்டியுள்ளது. மகனின் இந்த நிலையைக் கண்டு கூலித் தொழிலாளிகளான சிறுவனின் பெற்றோர் வேதனையுடன் நாட்களைக் கடந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories