வைரல்

6 அடி உயரம் 90 கிலோ எடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவத்தில் பிரம்மாண்ட கேக்.. அசத்திய பேக்கரி!

6 அடி உயரம், 90 கிலோ எடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவத்தை கேக் வடிவில் பேக்கரி உரிமையாளர் தயாரித்துள்ளார்.

6 அடி உயரம் 90 கிலோ எடையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவத்தில் பிரம்மாண்ட கேக்.. அசத்திய பேக்கரி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ளது ராஜேஸ்வரி ஸ்வீட் பேக்கரி. இங்குக் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 10 நாட்கள் கேக் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி, வலது கையை உயர்த்தியபடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிற்பது போல் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கேக் பலரையும் கவர்ந்துள்ளது.

6 அடி உயரம் 90 கிலோ எடையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவத்தில் பிரம்மாண்ட கேக்.. அசத்திய பேக்கரி!

சுமார் 6 அடியில் 90 கிலோவில் சர்க்கரை, 80 முட்டை கலந்த கலவையால் 2 நாட்களில் பேக்கரி உரிமையாளர் செல்வம் மற்றும் ஊழியர்கள் 4 பேர் குழுவாகச் சேர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழு உருவத்தை கேக்காக தயாரித்துள்ளது. இந்த கேக் இரண்டு நாட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேக் வடிவத்தை ஆச்சரியத்துடன் பார்த்து செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர்.

6 அடி உயரம் 90 கிலோ எடையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவத்தில் பிரம்மாண்ட கேக்.. அசத்திய பேக்கரி!

இது குறித்து பேக்கரி உரிமையாளர் செல்வம் கூறுகையில், " தமிழ்நாடு முதலமைச்சரின் ஒன்றரை ஆண்டுக் கால ஆட்சியின் செயல்பாடுகள் பாராட்டக்கூடிய விதமாக 90 கிலோ எடையில் முதலமைச்சரின் உருவத்தை வடிவமைத்துள்ளோம். பாரம்பரியமான வேஷ்டி சட்டையில் அவர் பிரம்மாண்டமாக நிற்பது போல் இந்த கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories