வைரல்

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்.. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த Vikram-S !

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-எஸ்’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்.. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த Vikram-S !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் தனது ராக்கெட்களை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2020ல் மேற்கொண்டது.

இந்த ஒப்பந்தத்தின் படி ஓராண்டுக்கும் மேலாக ராக்கெட் தயாரிப்பு பணிகளில் ஸ்கைரூட் ஈடுபட்டு வந்தது. வெவ்வேறு எடைகளைச் சுமந்து செல்லக்கூடிய 3 விதமான ராக்கெட்கள் இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக ‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்டது.

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்.. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த Vikram-S !

இதையடுத்து இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து காலை 11.30 மணிக்கு வெற்றி கரமாக விண்ணில் விக்ரம் எஸ் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் 7 டன் உந்து சக்தியைக் கொண்டது. அதிகபட்சமாக 480 கிலோ எடையைச் சுமந்துசெல்லக்கூடியது.

இந்தியாவில் முதல் கார்பன்-ஃபைபர்-கட்டமைக்கப்பட்ட திட எரிபொருள் எஞ்சின் மூலம் இயக்கப்படும் விக்ரம்-எஸ் ராக்கெட் முதலில் நவம்பர் 15 ஆம் தேதி விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக மாற்றி அமைக்கப்பட்டு இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்.. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த Vikram-S !

இந்த ராக்கெட்டுடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குழு வடிவமைத்த 3 ஆய்வு சாதனங்களும் சேர்த்து அனுப்பப்பட்டன. அவை புவி மேற்பரப்பிலிருந்து 120 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு, ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் 2.5 கிலோ எடையுள்ள சென்னையைச் சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான Spacekidz உருவாக்கியுள்ள 'Fun-Sat' செயற்கைக்கோளும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பல்வேறு தனியார் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தயாரித்த ராக்கெட்களை விண்ணில் செலுத்தவும் இஸ்ரோ திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories