வைரல்

’KTR மாமாவுக்கு ஒரு வேண்டுகோள்’-குழந்தைகள் தினத்தில் சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய தெலங்கானா அமைச்சர்!

குழந்தைகள் தினத்தன்று தெலங்கானா சிறுவன் வைத்த கோரிக்கையை அம்மாநில அமைச்சர் நிறைவேற்றியுள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’KTR மாமாவுக்கு ஒரு வேண்டுகோள்’-குழந்தைகள் தினத்தில் சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய தெலங்கானா அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

குழந்தைகள் தினத்தன்று தெலங்கானா சிறுவன் வைத்த கோரிக்கையை அம்மாநில அமைச்சர் நிறைவேற்றியுள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் அமைந்துள்ளது கோல்டன் சிட்டி காலனி. இந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர் ஒருவர், அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சிறுவன் அம்மாநில அமைச்சருக்கு வீடியோ மூலம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

நேற்று (14.11.2022) குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது அந்த சிறுவன் குழந்தைகள் தினத்தன்று அம்மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே.டி.ராமாராவுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

’KTR மாமாவுக்கு ஒரு வேண்டுகோள்’-குழந்தைகள் தினத்தில் சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய தெலங்கானா அமைச்சர்!

அந்த கோரிக்கையில், "KTR மாமாவுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.. குழந்தைகள் தினத்தன்று ஒரு சிறு வேண்டுகோள்.. நாங்கள் ஐதராபாத் நகரத்தில் (கோல்டன் சிட்டி காலனி, தூண் எண்:248) கடந்த 5 வருடங்களாக வசித்து வருகிறோம். நாங்கள் குடிநீர்க் குழாய் வசதிக்காகக் காத்திருக்கிறோம்.. நாங்கள் அதிக சிரமங்களை மேற்கொள்கிறோம். தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை படேல் என்ற ட்விட்டர்வாசி ஒருவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து. "சுருக்கமாகச் சொன்னால், ஹைதராபாத் நகரத்தில் (கோல்டன் சிட்டி காலனி, தூண் எண்:248) கடந்த 5 வருடங்களாக வசிக்கும் நாங்கள் குடிநீர்க் குழாய்க்காகக் காத்திருக்கிறோம்... மற்ற எல்லா வரிகளையும் செலுத்துகிறோம். நாங்கள் அதிகம் கேட்கிறோமா??" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இதனை அமைச்சர் கே.டி.ராமாராவுக்கு tag செய்திருந்தார்.

இது இணையத்தில் வைரலானதை அடுத்து, அம்மாநில அமைச்சர் கே.டி.ராமாராவ், ஐதராபாத் மாநகராட்சி பெருநகர நீர்ப்பணிகள் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் (HMWSSB) நிர்வாக இயக்குநர் தன கிஷோரை தொடர்பு கொண்டு சம்மந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு பிரச்சினையைத் தீர்க்குமாறு அறிவுறித்தியுள்ளார்.

Telangana Minister KT Rama Rao,
Telangana Minister KT Rama Rao,

அதன்படி அங்கு வந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிகாரி கிஷோர், "இப்பகுதிக்கு குழாய் அமைக்க ரூ.2.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மழைக்காலத்தில் சாலையை தோண்டுவதற்கு GHMC தடை விதித்ததால் அக்டோபர் 31-ஆம் தேதி வரை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

குழாய் பதிக்கும் பணி தாமதமாகி வந்தாலும், விரைவில் பணிகள் துவங்கும். 2 வாரத்தில் குழாய் பதிக்கும் பணி முடிவடைந்து, அதன்பிறகு குடிநீர் விநியோகம் துவங்கும். அதுவரை இந்த காலனிக்கு குடிநீர் வாரியம் டேங்கர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும்" என்றார்.

’KTR மாமாவுக்கு ஒரு வேண்டுகோள்’-குழந்தைகள் தினத்தில் சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய தெலங்கானா அமைச்சர்!

குழந்தைகள் தினத்தன்று அந்த குழந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் சிறுவனின் இந்த கோரிக்கையை ஏற்று அம்மாநில அமைச்சர் குடிநீர் குழாய் பணிகள் விரைவில் தொடங்க ஏற்பாடு செய்துள்ளது அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது. மேலும் சிறுவனின் இந்த செயல் அந்த பகுதி மக்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories