இந்தியா

உல்லாச வாழ்க்கைக்கு ஆசை.. டெல்லிக்கு அழைத்துச்சென்று மனைவியை விற்ற கணவர்.. ஒடிசாவில் அதிர்ச்சி !

தனது மனைவியை வேறு நபருக்கு திருமணம் செய்து வைத்த கணவரின் செயல் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உல்லாச வாழ்க்கைக்கு ஆசை.. டெல்லிக்கு அழைத்துச்சென்று மனைவியை விற்ற கணவர்.. ஒடிசாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒடிசா மாநிலம் கலஹண்டி என்றார் பகுதியில் உள்ளது நார்லா. இங்கு வசித்து வருபவர் கிரா பெருக் (வயது 25). இவருக்கும் பூர்ணிமா என்ற இளம்பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில மாதங்களிலே டெல்லியில் வேலை தேடி செல்வதாக கூறி சென்றுள்ளார். அப்போது உடன் அவரது மனைவியையும் அழைத்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் அங்கே சென்ற இவர், திடீரென்று தனது மனைவியை டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு விற்றுள்ளார். மேலும் இருவருக்கும் அனைவர் மத்தியிலும் திருமணம் செய்து வைத்துவிட்டு பின்னர் அங்கிருந்து தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார் கிரா.

உல்லாச வாழ்க்கைக்கு ஆசை.. டெல்லிக்கு அழைத்துச்சென்று மனைவியை விற்ற கணவர்.. ஒடிசாவில் அதிர்ச்சி !

இதையடுத்து தான் எந்த பகுதியில் இருக்கிறோம் என்பதை அறியாத பூர்ணிமா, சுமார் 1 வார காலத்திற்கு பிறகு தனது தந்தையை தொடர்புகொண்டார். அப்போது தனது கணவர் தனக்கு செய்த அநியாயத்தை கூறி கதறி அழுதுள்ளார். மேலும் தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்தார் என்று கூறி அது தொடர்பான வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளார்.

உல்லாச வாழ்க்கைக்கு ஆசை.. டெல்லிக்கு அழைத்துச்சென்று மனைவியை விற்ற கணவர்.. ஒடிசாவில் அதிர்ச்சி !

இதைக்கண்டதும் பதறிப்போன பூர்ணிமாவின் தந்தை தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைகளை காவல்நிலையத்திற்கு சென்று கூறினார். மேலும் தனது மருமகன் மீது புகாரும் அளித்துள்ளார். மேலும் தனது மகள் தற்போது எங்கு இருக்கிறார் என்பது அவருக்கே தெரியவில்லை ; எனவே தனது மகளையும் விரைவில் கண்டுபிடித்து தரும்படியும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

உல்லாச வாழ்க்கைக்கு ஆசை.. டெல்லிக்கு அழைத்துச்சென்று மனைவியை விற்ற கணவர்.. ஒடிசாவில் அதிர்ச்சி !

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் கிராவை தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் அவரை, அவரது சொந்த ஊரில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் பூர்ணிமா குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் விரைவில் மீட்கப்படுவார் என்று காவல்துறை தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

தனது மனைவியை வேறு நபருக்கு திருமணம் செய்து வைத்த ஒடிசாவை சேர்ந்த கணவரின் செயல் தற்போது இந்திய அளவில் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories