வைரல்

‘டெம்போ வைச்சு கடத்தி இருக்கோம்..கொஞ்சம் பார்த்து பண்ணுங்க’: பிரபல எழுத்தாளரிடம் பேரம் பேசிய எலான் மஸ்க்!

ட்விட்டர் புளுட்டிக்கிற்கு கட்டணம் செலுத்த முடியாது என பிரபல எழுத்தாளர் கேள்விக்கு எலான் மஸ்கின் பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘டெம்போ வைச்சு கடத்தி இருக்கோம்..கொஞ்சம் பார்த்து பண்ணுங்க’: பிரபல எழுத்தாளரிடம் பேரம் பேசிய எலான் மஸ்க்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் முதல் சாமானிய மக்கள் வரை என பலரும் ட்விட்டர் சமூகவலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் கடந்த வாரம் ட்விட்டர் நிறுவனததின் உரிமையாளராகியுள்ளார். இதையடுத்து எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எட்விட்டர் நிறுவனத்தில் எடுத்து வருகிறார்.

‘டெம்போ வைச்சு கடத்தி இருக்கோம்..கொஞ்சம் பார்த்து பண்ணுங்க’: பிரபல எழுத்தாளரிடம் பேரம் பேசிய எலான் மஸ்க்!

முதலில் ட்விட்டர் நிறுவனத்தி தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் ஆகிய உயர் அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்துள்ளார். மேலும் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களில் 75% பேரை நீக்கவும் எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார்.

இதற்கு அடுத்த படியாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்காகக் கருத வழங்கப்படும் புளுடிக்கிற்க கட்டணம் வசூலிக்கப் போவதாக ஏற்கனவே அறிவிந்து வந்தார் எலான் மஸ்க். இதையடுத்து புளுடிக் வைத்துள்ள ட்விட்டர் பயணர்கள் மாதம் 8 டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.660) செலுத்து வேண்டும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இவரின் இந்த கட்டண வசூலுக்கு ட்விட்டர் பயனர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் கட்டணம் நிர்ணயம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க நாவலாசிரியர் ஸ்டிபன் கிங் புளுடிக்கிற்கு கட்டணம் வசூலிப்பதற்குத் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒரு புளு டிக்கிற்கு 20 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டுமா? நீங்கள் தான் எனக்கு பணம் தர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

‘டெம்போ வைச்சு கடத்தி இருக்கோம்..கொஞ்சம் பார்த்து பண்ணுங்க’: பிரபல எழுத்தாளரிடம் பேரம் பேசிய எலான் மஸ்க்!

இவரின் இந்த ட்விட்டர் பதிவுக்கு எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில், "நிறுவனத்தை லாபகரமாக வைத்திருப்பது அவசியம். கட்டணம் செலுத்துவோர் வீடியோ மற்றும் ஆடியோ போன்றவற்றைக் கூடுதல் நேரத்திற்கு புதிவு செய்யலாம். நாங்களும் கட்டணம் செலுத்த வேண்டும். விளம்பரதாரர்களை மட்டுமே ட்விட்டர் நிறுவனம் முழுமையாக நம்பியிருக்க முடியாது. 8 டாலர் என்றால் செலுத்துவீர்களா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையடுத்து இவர்கள் இருவரது ட்விட்டர் பதிவு உரையாடல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இணைய வாசிகள் பலரும் புளுடிக் கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories