வைரல்

“காலநிலை மாற்றத்தால் உள்நாட்டுக் கலவரம் ஏற்படும்..”: காலநிலை விளைவால் உருவாகும் ‘கேடு’ பற்றி தெரியுமா ?

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அரச ஒடுக்குமுறை, கலவரங்கள் போன்றவற்றை காலநிலை மாற்ற விளைவுகளாக ஐ.நா பட்டியலிட்டுள்ளது.

“காலநிலை மாற்றத்தால் உள்நாட்டுக் கலவரம் ஏற்படும்..”: காலநிலை விளைவால் உருவாகும் ‘கேடு’ பற்றி தெரியுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

பொதுவாக எந்தவொரு சமூகநிகழ்வுக்கும் மூன்று விதமான விளைவுகள் இருக்கும். அரசியல் விளைவு, பொருளாதார விளைவு மற்றும் பூகோள விளைவு! கடந்த ஐந்து வருடங்களில் புதிதாக ஒரு விளைவும் உடன் சேர்ந்திருக்கிறது. காலநிலை விளைவு!

ஏனெனில் இத்தனை காலமும் நம்முடைய மூளை பயிற்றுவிக்கப்பட்ட வழியிலேதான் சிந்தனை முறையும் வளர்ந்திருக்கிறது. அம்முறை எதற்குள்ளும் விவாதிக்கப்படாமலும் பொருட்படுத்தப்படாமலும் இருந்த விஷயம் இயற்கைச்சூழலின் அழிவும் அது ஏற்படுத்தக் கூடிய காலநிலை விளைவுகளும்.

“காலநிலை மாற்றத்தால் உள்நாட்டுக் கலவரம் ஏற்படும்..”: காலநிலை விளைவால் உருவாகும் ‘கேடு’ பற்றி தெரியுமா ?

வடக்கே நேர்ந்த வெள்ளங்களாகவும் தற்போது பெங்களூருவின் நேர்ந்து கொண்டிருக்கும் வெள்ளமாகவும்தான் நம் சிந்தனை காலநிலை விளைவுகளை புரிந்து வைத்திருக்கிறது. ஆனால் இன்றைய காலநிலை விளைவு பல தொடர் சமூக நிகழ்வுகளின் விடையே!

காலநிலை மாற்றம் என்பது புதிதாக உருவாகிவிடவில்லை. காலந்தோறும் நம் வாழ்க்கைமுறைகள் விதைத்து வந்த வினைகளே இன்று நம்மை அச்சுறுத்தும் காலநிலை மாற்றமாக வளர்ந்து நிற்கிறது. நம் எல்லாவித உரையாடல்களிலும் கடந்த ஐந்து வருடத்திய காலநிலை மாற்றம் இடம் பிடிக்க மறுக்கிறது. மழை என்றாலும் அடைமழை என சுருக்கி விடுகிறோம். புயல் என்றாலும் பெரும்புயல் என முடித்து விடுகிறோம். ஆனால் இவை கொடுக்கப்போகும் சமூகச் சிக்கல்கள் என்னவென யோசிக்க தயாராக கூட இல்லை நாம்.

“காலநிலை மாற்றத்தால் உள்நாட்டுக் கலவரம் ஏற்படும்..”: காலநிலை விளைவால் உருவாகும் ‘கேடு’ பற்றி தெரியுமா ?

காலநிலை மாற்றம் ஒரு சர்வதேச நிகழ்வு. அதற்கு பாஸ்போர்ட் கிடையாது. ரயில் பிடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. எங்கு என்ன நேர்ந்தாலும் அது நம்மையும் பாதிக்கும். கடந்த சில வருடங்களில் நேர்ந்த காலநிலை விளைவுகள் ஏற்கனவே இருக்கும் சமூகச் சிக்கல்களோடு இணைகையில் அது என்னவாக மாறும்?

சமீபத்தில் இந்தியாவில் வெங்காயத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலை அதிகரித்தது நினைவில் இருக்கலாம். அது 2019ம் ஆண்டு. ஏன் விலையேறியது? இந்தியாவுக்கு வெங்காயங்கள் கிடைக்கும் மகராஷ்டிரா உள்ளிட்ட மத்திய மாநிலங்களில் கடும் மழை பெய்தது. வெங்காய விளைச்சல் அழிந்தது. அடுத்தப் பருவத்தில் வெங்காயம் விதைத்து அதற்கும் பிறகு அறுவடை செய்தால்தான் இந்தியாவில் வெங்காயம் கிடைக்கும் என்கிற நிலை. எனவே விலை எகிறியது. வெங்காயப் பற்றாக்குறையை சமாளிக்க எகிப்திலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்தது இந்திய அரசு.

“காலநிலை மாற்றத்தால் உள்நாட்டுக் கலவரம் ஏற்படும்..”: காலநிலை விளைவால் உருவாகும் ‘கேடு’ பற்றி தெரியுமா ?

இப்பிரச்சினையின் மறுபக்கத்தைப் பாருங்கள்.

விளைச்சல் அழிந்து வருமானம் கிடைக்கக் காத்திருந்த விவசாயி, விளைச்சலின்றி என்ன செய்வான்? அடுத்த நடவுக்கு குறைந்தபட்சம் 3 மாதம் ஆகும். 3 மாதங்களுக்கு அவனது குடும்பம் உண்ண வேண்டும். வருமானம் வேண்டும். வேறு வழியின்றி கூலித் தொழிலுக்கு நகருவான். அருகாமை நகரங்களுக்கு இடம்பெயருவான். அப்படி இடம்பெயரும் நகரங்கள் அத்தகைய விவசாயிகளுக்கான வேலைகளை கொண்டிருக்குமா? வீடு கிடைக்குமா? வாடகைக்கு என்ன வழி? வேலை கிடைத்தாலும் அவனுடைய வாழ்க்கைக்கு போதுமான அளவுக்கு அது இருக்குமா? அப்படி இல்லையெனில் அவன் என்ன செய்வான்?

“காலநிலை மாற்றத்தால் உள்நாட்டுக் கலவரம் ஏற்படும்..”: காலநிலை விளைவால் உருவாகும் ‘கேடு’ பற்றி தெரியுமா ?

காலநிலை மாற்ற விளைவுகளில் ஒன்றாக நகரங்களில் உள்நாட்டுக் கலவரம் ஏற்படும் என ஐ.நா குறிப்பிட்டிருக்கிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அரச ஒடுக்குமுறை, கலவரங்கள் போன்றவற்றை காலநிலை மாற்ற விளைவுகளாக ஐ.நா பட்டியலிட்டுள்ளது.

பார்ப்பதற்கு மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் போடப்படும் முடிச்சாக தெரியலாம். மொட்டைத் தலையும் முழங்காலும் ஓருடலில்தான் இருக்கிறது என்பது புரிந்தால் பிரச்சினை புரியும். இரண்டுக்குமான தூரத்தை கொண்டு முடிச்சு விழுவதை நம்ப மறுத்தால் அடுத்தடுத்த முடிச்சுகள் சுருக்காக மாறும்.

இதுதான் காலநிலை விளைவு.

உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் மாதக் கட்டணம் கட்டுவதற்கு முன், காலநிலை மாற்றத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனின் அவர்களின் வாழ்க்கையைத்தான் நீங்கள் விழிப்பு கொள்ளாமல் சிதைக்கிறீர்கள்!

banner

Related Stories

Related Stories