வைரல்

“மண்டை மேல இருக்குற கொண்டைய மறந்துட்டீங்களே பாஸ்..”: Bulb-ஐ திருடி Bulb வாங்கிய உ.பி போலிஸ்.. VIRAL VIDEO

உத்தர பிரதேசத்தில் கடையின் வெளியே தொங்கிக்கொண்டிருந்த Bulb-ஐ காவலர் ஒருவர் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலானதையடுத்து, அந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

“மண்டை மேல இருக்குற கொண்டைய மறந்துட்டீங்களே பாஸ்..”: Bulb-ஐ திருடி Bulb வாங்கிய உ.பி போலிஸ்.. VIRAL VIDEO
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலம் பிரக்யராஜ் பகுதியில் உள்ள புல்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர் காவலர் ராஜேஷ் வர்மா. தற்போது பண்டிகை காலம் என்பதால் அங்கு அடிக்கடி விழாக்கள் கொண்டாடப்படும். அந்த வகையில் கடந்த அக்டோபர் 6-ம் தேதி தசரா விழா கொண்டாடப்பட்டது. அப்போது இரவு ராஜேஷ் வர்மா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில், அப்போது அங்கிருந்த கடை ஒன்றின் வெளியே நின்றுகொண்டிருந்த காவலர், திடீரென அக்கம்பக்கத்தை சுற்றிப்பார்த்தார். பின்னர் யாரும் இல்லை என்பதை அறிந்த அவர், அந்த கடையின் மேலே தொங்கிக்கொண்டிருந்த எரிந்துகொண்டிருந்த பல்பை மெதுவாக கழட்டியுள்ளார். பின்னர் அதனை தனது பாண்ட் பாக்கெட்டில் வைத்துள்ளார்.

“மண்டை மேல இருக்குற கொண்டைய மறந்துட்டீங்களே பாஸ்..”: Bulb-ஐ திருடி Bulb வாங்கிய உ.பி போலிஸ்.. VIRAL VIDEO

பின்னர் மறுநாள் கடையை திறந்த உரிமையாளர், தனது கடையில் இருந்த பல்ப் காணாமல் போனதை அறிந்துள்ளார். அப்போது கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை சோதனை செய்தபோது அதில் காவலர் ஒருவர் திருடிச்செல்லும் காட்சி இடப்பெற்றிருந்தது. இதனைக்கண்டதும் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.

அவரளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அந்த காவலர் யார் என்பதை கண்டறிந்தார். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அன்று தான் பணியாற்றிய இடத்தில் இருட்டாக இருந்ததால், அங்கு பயன்படுத்துவதற்காகவே அந்த பல்பை கழட்டியதாக விளக்கமளித்துள்ளார். இதையடுத்து அவர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த புகார் தொடர்பாக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories