வைரல்

“மார்க்சியவாதி - அம்பேத்கரியவாதி - பெரியாரியவாதி என்பவன் யார்?” - அவர்களை புரிந்துக்கொள்வது எப்படி ?

மார்க்ஸ்ஸுக்கும் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் ஒரு வரலாற்று தேவை இருந்தது. சமூக ரீதியாக அவர்கள் அல்லது அவர்களை போன்ற சிந்தனையாளர்களும் செயற்பாட்டாளர்களும் தேவைப்பட்டார்கள்.

“மார்க்சியவாதி - அம்பேத்கரியவாதி - பெரியாரியவாதி என்பவன் யார்?” - அவர்களை புரிந்துக்கொள்வது எப்படி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

மார்க்சியவாதி என்பவன் யார் அல்லது கம்யூனிஸ்ட் என்பவன் யார்?

அம்பேத்கரியவாதி என்பவன் யார்?

பெரியாரியவாதி என்பவன் யார்?

கம்யூனிஸ்ட் என்று எவரும் இருக்க முடியாது. கம்யூனிச சமூகத்தில் இருக்கும்போதே ஒருவர் கம்யூனிஸ்ட் ஆகிறார். தற்போதைய சூழலில் பேச்சுக்கு சொல்லிக் கொள்கிறோம். மன அளவிலேனும் ஒருவர் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளில் இருந்து விலகியோ அல்லது அவற்றின் பயனை குறைத்துக் கொண்டே இருப்பவரை இன்றையச் சூழலில் கம்யூனிஸ்ட் என சொல்லிக் கொள்ளலாம். ஆனாலும் அவர் மார்க்சியவாதியாக நிச்சயம் இருக்க வேண்டும்.

அது என்ன 'வாதி'?

இங்குதான் ஒரு குழப்பம் நிலவுகிறது.

'ச்சே.. மார்க்ஸ் எவ்ளோ கஷ்டப்பட்டாலும் இந்த உலகத்துக்காக சிந்திச்சாருல்ல!'

'90 வயசு வரைக்கும் மக்களுக்காக பெரியார் போராடுனாரு'

'எத்தனை புக்கை அம்பேத்கர் தொடர்ந்து நமக்காக எழுதி வச்சிட்டு போயிருக்காரு!'

மூன்றில் ஒரு 'வாதி'யாக இருப்பதற்கு இவை காரணமாக இருக்க முடியாது. இவை'யும்' வேண்டுமானால் காரணமாக இருக்கலாம். இவற்றை மட்டுமே கொண்டு மூவரையும் கொண்டாடுவதற்கு பெயர் மதிப்பு அல்லது Fanboyism!

“மார்க்சியவாதி - அம்பேத்கரியவாதி - பெரியாரியவாதி என்பவன் யார்?” - அவர்களை புரிந்துக்கொள்வது எப்படி ?

அடுத்ததாக மூவரும் பேசிய, எழுதிய அனைத்தையும் படித்து தெரிந்துகொள்வதும் நம்மை ‘வாதி’யாக்கிவிடாது. அதுவொரு பண்டிதத்தன்மையை கொடுக்கும். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் என்ன மாதிரியான விஷயங்களை பேசியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள், யோசித்திருக்கிறார்கள் என நம்மால் எடுத்து சொல்ல முடியும். அது ஒரு academician-க்கான நிலை. இன்றைய புரட்டுகளுக்கு மத்தியில் முக்கியத் தேவையும் கூட.

ஒரு ‘வாதி’யை என்னவெனதான் வரையறுப்பது?

மார்க்ஸ்ஸுக்கும் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் ஒரு வரலாற்று தேவை இருந்தது. சமூக ரீதியாக அவர்கள் அல்லது அவர்களை போன்ற சிந்தனையாளர்களும் செயற்பாட்டாளர்களும் தேவைப்பட்டார்கள். அந்த தேவைக்கான காரணிகள் என்னவென்பதை ஆராய்ந்து, அவை இன்னும் நீடிப்பதை புரிந்துகொண்டு, மார்க்ஸ்ஸும் அம்பேத்கரும், பெரியாரும் அவர்தம் காலங்களில் அக்காரணிகளுக்கு எதிராக இயங்கியதை அறிந்து கொள்ள வேண்டும். பின் அவர்கள் இயங்கிய விதத்தை புரிந்துகொண்டு, அவ்வகையிலான இயக்கம் ஏன் அவர்களிடமிருந்தது என்பதை ஆராய வேண்டும். பின் அவர்களுக்கு இருந்த தடைகள் அல்லது வாய்ப்புகள், சிக்கல்கள் அல்லது தீர்வுகள் ஆகியவற்றை நிறுத்தி பார்த்து ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

“மார்க்சியவாதி - அம்பேத்கரியவாதி - பெரியாரியவாதி என்பவன் யார்?” - அவர்களை புரிந்துக்கொள்வது எப்படி ?

மூவரிலும் அவரவருக்கு உண்டான காலகட்டம், வெளிப்பாடு, நோக்கம், தடைகள் என அனைத்தையும் நேர்மையுடன் எந்த விருப்புவெறுப்பும் இல்லாமல் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு அவர்களில் யாரை பின்பற்றுவது என்ற முடிவுக்கு வர வேண்டும். அந்த முடிவு அடுத்த இருவரை புறக்கணிப்பதாக நிச்சயம் இருக்க முடியாது. அப்படி புரிந்து கொள்ளவும் கூடாது.

ஒரு விவேக் காமெடியில் வருவது போல், ‘எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே மருந்து... ஒருவரே மருந்து’ என யோசிக்க முடியாது. பேசவும் முடியாது. அப்படி ஒருவரே மருந்தாக இருந்திருந்தால், இன்று அப்பிரச்சினைகள் ஏதும் இருந்திருக்காது. அப்பிரச்சினைகளை எதிர்த்த மூவரை பற்றி பேசியிருக்கவும் மாட்டோம்.

banner

Related Stories

Related Stories