வைரல்

"I Phone-க்கு பதில் கல்.. Laptop-க்கு பதில் சோப்பு.." - Flipkart-ல் ஆர்டர் செய்த IIM பட்டதாரி குமுறல்..

Flipkart-ல் ஆன்லைனில் Laptop ஆர்டர் செய்த பெண்ணுக்கு 4 - 5 சோப்புகள் பர்செலில் வந்துள்ளதால் அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

"I Phone-க்கு பதில் கல்.. Laptop-க்கு பதில் சோப்பு.." - Flipkart-ல் ஆர்டர் செய்த IIM பட்டதாரி குமுறல்..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள காலகட்டத்தில் பொதுமக்கள் பலரும் தங்களுக்கு தேவையானவையை ஆன்லைனின் ஆர்டர் செய்துகொள்கின்றனர். அதிலும் குறிப்பாக பண்டிகை காலகட்டத்தில் வெளிக்கடைகளில் கிடைப்பதை விட ஆன்லைனில் அதிக சலுகைகள் கிடைக்கும். இதனாலே பண்டிகை காலங்களில் மக்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்வர்.

அதிலும் குறிப்பாக மொபைல் போன், லேப்டாப், சார்ஜர், ஹெட் போன் போன்ற மின் பொருட்களை ஆன்லைனிலே ஆர்டர் செய்வர். அப்படி ஆர்டர் செய்பவர்களில் சிலருக்கு வேறு பொருட்கள் வரும். அந்த வகையில் தற்போது தான் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறு பொருள் வந்ததாக தனக்கு நடந்த அனுபவத்தை பெண் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

"I Phone-க்கு பதில் கல்.. Laptop-க்கு பதில் சோப்பு.." - Flipkart-ல் ஆர்டர் செய்த IIM பட்டதாரி குமுறல்..

அதாவது குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் யாஷஸ்வி ஷர்மா. IIM பட்டதாரியான இவர், தனக்கு தேவையான முக்கிய போர்டுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதன்படி தான் ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதிலாக வேறு பொருளை கொடுத்த அந்த நிறுவனம், போதிய ஆதாரங்கள் இருந்த போதிலும் தனது தவறை ஒப்புக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், "Flipkart-ன் பிக் பில்லியன் டேஸ் சேல்-ல் எனது தந்தைக்கு லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்தேன். ஆனால் லேப்டாப்-பிற்கு பதிலாக என் தந்தைக்கு வந்ததோ டிடெர்ஜென்ட் சோப்கள். இதற்கான சிசிடிவி ஆதாரங்கள் இருந்த போதிலும் ஈ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்காரட் தனது தவறை சரிசெய்ய மறுத்துவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.

"I Phone-க்கு பதில் கல்.. Laptop-க்கு பதில் சோப்பு.." - Flipkart-ல் ஆர்டர் செய்த IIM பட்டதாரி குமுறல்..

மேலும் "லேப்டாப்பிற்கு பதில் டிடெர்ஜென்ட் சோப்கள் டெலிவரி வந்துள்ளதாக Flipkart-ன் கஸ்டமர் சப்போர்ட்டில் முறையிட்டேன். ஆனால் அவர்கள் அதை காதில் வாங்கி கொள்ளவே இல்லை. நான் சொல்வது உண்மை தான் என்பதை நிரூபிக்க என்னிடம் சிசிடிவி ஆதாரம் உள்ளது என்று கூறிய போதும் கூட அவர்கள் அதை ஏற்கவில்லை என்று குமுறி உள்ளார். இந்த விஷயத்தில் பேக்கேஜை ஏற்று கொள்ளும் போது எனது தந்தை செய்த ஒரு தவறு ஓபன்-பாக்ஸ் டெலிவரி கான்செப்ட் பற்றி அவருக்குத் தெரியாமல் இருந்தது தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு "டெலிவரி ஏஜெண்ட் குறிப்பிட்ட பாக்ஸை ஆய்வு செய்யாமல் வந்து சென்றதற்கான சிசிடிவி ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர் சென்று பிறகு unboxing செய்ததில் லேப்டாப் உள்ளே இல்லை என்பதும் தெரிய வந்தது. Flipkart கஸ்டமர் சப்போர்ட்டிடம் இது குறித்து பேசி பலனில்லை. நுகர்வோர் மன்றத்தை அணுகும் முன் இந்த பிரச்னையைத் தீர்ப்பதற்கான கடைசி முயற்சியாக சோஷியல் மீடியாவில் இந்த போஸ்ட்டை ஷேர் செய்துள்ளேன்" என்றும் குறிப்பிட்டு தனது மனக்குமுறல்களை தெரிவித்துள்ளார்.

"I Phone-க்கு பதில் கல்.. Laptop-க்கு பதில் சோப்பு.." - Flipkart-ல் ஆர்டர் செய்த IIM பட்டதாரி குமுறல்..

மேலும் இந்த போஸ்டை Flipkart CEO கல்யாண் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருக்கும் டேக் செய்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக இதே போல் ஒரு பெண் போன் ஆர்டர் செய்தபோது அவருக்கு காலாவதியான பெளடர் டப்பா டெலிவரி ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories