வைரல்

தலைவன், தலைவி வழியில்.. காலநிலை மாற்றம் எந்தளவுக்கு உண்மை தெரியுமா?

தலைவனும் தலைவியும் பரம்பரை பரம்பரையாக ஆண்டு ஆடி அழித்து முடித்ததில் இன்று மருதமும் இல்லை. நெய்தலும் இல்லை. வயலும் இல்லை. கடலும் நம் உதவிக்கு இல்லை.

தலைவன், தலைவி வழியில்.. காலநிலை மாற்றம் எந்தளவுக்கு உண்மை தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஒரு காதலன் காதலியை ரகசியமாக சந்திக்க வருகிறான். அப்போது பெண்ணுடைய தோழி அவளிடம் பேசுவது போல் அவனிடம் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறாள்.

பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின்

இறை வரை நில்லா வளையும், மறையாது

ஊர் அலர் தூற்றும் கௌவையும், நாண் விட்டு

உரை அவற்கு உரையாம்ஆயினும், இரை வேட்டு,

கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது,

கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு,

முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும்

மெல்லம் புலம்பற் கண்டு, நிலைசெல்லாக்

கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு,

உரைத்த-தோழி!-உண்கண் நீரே.

தலைவன், தலைவி வழியில்.. காலநிலை மாற்றம் எந்தளவுக்கு உண்மை தெரியுமா?

ஜெர்க் ஆக வேண்டாம். அடிப்படையில் தோழி பெண்ணிடம் பேசுவது போல் தலைவனிடம் சொல்வது யாதெனில், ‘யாருக்கும் தெரியாம ரகசியமா வந்துட்டு, நீ பாட்டுக்கு போயிடுவே.. ஆனா ஊர்ல இருக்கறவன்லாம் தப்பா பேசிக்கிட்டு இருக்கான். அதையும் தாங்கிக்கிட்டு, தலைவி உனக்காக காத்திருக்கான்னு அதுக்கு அர்த்தம் அவ உன் மேல கொண்டிருக்கும் காதல். இதையெல்லாம் அவ நேரடியா சொல்லாம கண்ணீரால சொல்றத புரிஞ்சுக்கடா தண்டம். ஒழுங்கு மரியாதையா சீக்கிரம் கல்யாணம் பண்ற வேலைய பாரு!’ என்பதுதான் சாரம். நற்றிணையில் வரும் பாடல்.

இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒரு சின்ன கற்பனைதான் சுவாரஸ்யம்.

ஆண் நாரை, நெய்தல் நிலத்தின் கழிமுகத்திலிருந்து கொண்டு வரும் இரைக்காக விரும்பி சூல் கொண்ட பெண் நாரை வெகுதூரத்திலிருக்கும் மருத நிலத்தின் கழனியில் காத்திருப்பதை உதாரணமாக காட்டுகிறார் ஆசிரியர்.

தலைவன், தலைவி வழியில்.. காலநிலை மாற்றம் எந்தளவுக்கு உண்மை தெரியுமா?

நெய்தல் நிலத்தில் இருக்க வேண்டிய நாரை ஏன் மருத நிலத்துக்கு வந்தது என்பதை அது கொள்ளும் சோகத்தின் வழியாக சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். இன்று வயல், ஏரி என பல நீர்நிலை சூழலிலும் இருப்பதாக நாரையை அறிகிறோம். ஆனால் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கற்பனை ஒன்று சேர முடியாத ஜோடிக்கானது என்கிற நிலையில் பார்த்தால் ஏன் இருவகை வாழ்சூழல்களை ஒரு உயிர் பெற நேருகிறது என யோசிக்கும்போது சூழலில் நேரும் முரணை நாம் அடையலாம்.

அந்த தலைவனும் தலைவியும் பரம்பரை பரம்பரையாக ஆண்டு ஆடி அழித்து முடித்ததில் இன்று மருதமும் இல்லை. நெய்தலும் இல்லை. வயலும் இல்லை. கடலும் நம் உதவிக்கு இல்லை. நெய்தல் கொண்டிருந்த புன்னையும் அலையாத்தியும் பனையும் இல்லை. இவை யாவும் இல்லாது போனபின், இவை உருவாக்கியிருந்து உயிர்ச்சூழல் என்னவாகி இருக்கும்?

அந்த உயிர்ச்சூழல் பகிர்ந்திருந்த உயிர் பன்மையம் என்னவாகி இருக்கும்?

உயிர் பன்மையத்தை சார்ந்திருந்த இயற்கைச் சூழல் என்னவாகி இருக்கும்?

இப்படித்தான் காலநிலை மாற்றத்தை நாம் அடைந்திருக்கிறோம்.

banner

Related Stories

Related Stories