வைரல்

பள்ளி சிறுமியின் புத்தகப் பைக்குள் குடியிருந்த நாகப்பாம்பு.. இணையத்தில் வைரலாகும் திக்திக் வீடியோ!

மத்திய பிரதேசத்தில் பள்ளி சிறுமியின் புத்தகப் பைக்குள் நாகப்பாம்பு ஒன்று இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி சிறுமியின் புத்தகப் பைக்குள் குடியிருந்த நாகப்பாம்பு.. இணையத்தில் வைரலாகும் திக்திக் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம், ஷாஜாபூரில் பதோனி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது, அந்த மாணவி தனது புத்தகப் பையை பார்த்துள்ளார். இதில் ஏதோ ஒன்று நெளிவது போன்று இருந்துள்ளது. இதனால் பதற்றம் அடைந்த அவர் இது குறித்து வகுப்பிலிருந்த ஆசிரியரிடம் கூறியுள்ளார்.

பள்ளி சிறுமியின் புத்தகப் பைக்குள் குடியிருந்த நாகப்பாம்பு.. இணையத்தில் வைரலாகும் திக்திக் வீடியோ!

உடனே அவர் புத்தகப் பையைத் திறந்து பார்த்தபோது அதில் நாகப்பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மூக்குக் கண்ணாடி அணிந்த ஒருவர் புத்தகப் பையைத் திறந்து புத்தகங்களை வெளியே எடுத்து தலைகீழாக உதறுகிறார். அப்போது நாகப்பாம்பு பொத்தென்று கீழே விழுந்து அங்கிருந்து ஊர்ந்து செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை பா.ஜ.கவை சேர்ந்த கரண் வசிஷ்தா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories