தமிழ்நாடு

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தொடரும் அதிசயம்.. வெண்கலத்தால் ஆன நாய், மான், ஆடு உருவங்கள் கண்டுபிடிப்பு!

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெண்கலத்தால் ஆன நாய், மான், ஆடு உருவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தொடரும் அதிசயம்..  வெண்கலத்தால் ஆன நாய், மான், ஆடு உருவங்கள் கண்டுபிடிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் இங்கு அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தொடரும் அதிசயம்..  வெண்கலத்தால் ஆன நாய், மான், ஆடு உருவங்கள் கண்டுபிடிப்பு!

அகழாய்வு பணியில் இதுவரை 85 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றிப்பட்டயம், சங்க கால வாழ்விடப்பகுதிகள் என ஏராளமான பொருட்கள் கிடைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அகழாய்வு பணியில் மேலும் அதிசயமாக வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடிக் கொண்ட கத்தி, இரும்பு வாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தொடரும் அதிசயம்..  வெண்கலத்தால் ஆன நாய், மான், ஆடு உருவங்கள் கண்டுபிடிப்பு!

ஆய்வாளர்கள் மத்தியில் தொடர் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாத இறுதியுடன் நிறைவு பெற உள்ள இந்த அகழாய்வு பணியில் தொடர்ந்து அருங்காட்சியப் பணிகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories