வைரல்

மருத்துவ சேவை ஒரு மகத்தான சேவை.. எடுத்துக்காட்டாக இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!

உத்தர பிரதேசத்தில் மருத்துவமனையில் அசைவற்று பிறந்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து மூச்சை செலுத்தி கண் விழிக்க வைத்த மருத்துவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ சேவை ஒரு மகத்தான சேவை.. எடுத்துக்காட்டாக இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மருத்துவ சேவை எவ்வளவு மகத்தானது என்பதை நாம் கொரோனா காலத்தில் உணர்ந்திருப்போம். இந்நிலையில் பெண் மருத்துவர் ஒருவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

உத்தர பிரதே மாநிலம், ஆக்ரா மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி ஒருவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது குழந்தை எவ்விதமாக அசைவற்று இருந்துள்ளது.

மருத்துவ சேவை ஒரு மகத்தான சேவை.. எடுத்துக்காட்டாக இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!

இதைக் கவனித்த குழந்தைகள் நல மருத்துவர் சுலேகா சௌத்தி, உடனே குழந்தையைக் கையில் தூக்கி குழந்தையின் வாயோடு தனது வாய் வைத்து மூச்சுக் காற்றைச் செலுத்தியுள்ளார். இப்படி தொடர்ச்சியாகச் செய்துள்ளார். பிறகு குழந்தையின் முதுகைத் தட்டினார். இப்படியே விடாமுயற்சியாக 7 நிமிடங்கள் செய்துள்ளார். மருத்துவரின் இந்த முயற்சியை அடுத்து குழந்தை கண்விழித்துள்ளது.

இதைப்பார்த்த அங்கிருந்த அனைவரும் நெகிழ்ந்து மருத்துவர் சுலேகா சௌத்ரியை பாராட்டியுள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து மருத்துவர் சுலோகாவின் இந்த செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வாழ்த்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories