வைரல்

முத்தமழை பொழிந்த நாய்கள்.. தெருநாய்களுடன் நண்பர்கள் தினத்தை கொண்டாடிய பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, ஒரு பெண்ணை 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கொஞ்சுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முத்தமழை பொழிந்த நாய்கள்.. தெருநாய்களுடன் நண்பர்கள் தினத்தை கொண்டாடிய பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுகிழமை நண்பர்கள் தினம் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தியாவில் நேற்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. நண்பர்கள் தினத்தை பலரும் பலவிதமாக கொண்டாடி வந்ததை குறித்து தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

முத்தமழை பொழிந்த நாய்கள்.. தெருநாய்களுடன் நண்பர்கள் தினத்தை கொண்டாடிய பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த நிலையில், நண்பர்கள் தினத்தை முன்னிட்டு ட்விட்டர்வாசி ஒருவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு பெண்ணை 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றிவளைத்து கட்டிபிடித்து கொஞ்சுகிறது.

அந்த பெண் போதும் போதும் என்று சொல்லிய போதும், அந்த நாய்கள் மீண்டும் அந்த பெண்ணை கொஞ்சி தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறது. இந்த பெண் அந்த நாய்களுக்கு தினமும் உணவளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாய்கள் நண்பர்கள் போல் நம்மிடம் நெருங்கி பழகக்கூடியவை என்பது நாய் வளர்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories