வைரல்

பொம்மை பைக்கில் வந்து குழந்தையை கடத்த முயன்ற குரங்கு.. வைரல் வீடியோவின் பின்னணி என்ன ?

பொம்மை பைக்கில் வந்த குரங்கு ஒன்று குழந்தையை இழுத்து சென்றது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொம்மை பைக்கில் வந்து குழந்தையை கடத்த முயன்ற குரங்கு.. வைரல் வீடியோவின் பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தோனேசியாவில் இருக்கும் தஞ்சுங்சாரி என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் குழந்தைகள் அமர்ந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பார்க்காத நேரத்தில் பொம்மை பைக்கில் வேகமாக வந்த குரங்கு ஒன்று, அங்கு அமர்ந்திருந்த குழந்தைகளில் ஒரு குழந்தையை இழுத்தது.

இதில் கீழே விழுந்த அந்த குழந்தையை குரங்கு தரதரவென இழுத்து சென்றது.

இதனை கண்ட அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் கத்திய போது, குழந்தையை இழுத்தச் சென்ற குரங்கு அந்த குழந்தையை அங்கேயே விட்டு சென்றது. இது தொடர்பான வீடியோ கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது.

பொம்மை பைக்கில் வந்து குழந்தையை கடத்த முயன்ற குரங்கு.. வைரல் வீடியோவின் பின்னணி என்ன ?

இந்த வீடியோவை சுமார் 42.5 மில்லியனுக்கும் மேலானோர் பார்த்துள்ளனர். மேலும் இந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories