வைரல்

பிரபல youtuber புற்றுநோய் பாதிப்பால் மரணம் - தந்தை மூலம் ரசிகர்களுக்கு உண்மையை வெளியிட்ட சோகம் !

10 மில்லியன் பேர் பின்தொடரும் பிரபல யூ-டியூப் பக்கத்தின் உரிமையாளர் 23 வயதில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல youtuber புற்றுநோய் பாதிப்பால் மரணம் - தந்தை மூலம் ரசிகர்களுக்கு  உண்மையை வெளியிட்ட சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

”Technoblad” என்ற யூ-டியூப் பக்கம் உலக அளவில் பிரசித்தி பெற்றது. இந்த யூ-டியூப் பக்கத்தை மட்டும் சுமார் 10 மில்லியன் பேர் பின்தொடருகின்றனர். ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி அதை பதிவு செய்து இந்த யூ-டியூப் பக்கத்தில் அதன் உரிமையாளர் பதிவிட்டு வந்துள்ளார். கடந்த ஆண்டு தனக்கு கேன்சர் இருப்பதை அதன் உரிமையாளர் ரசிகர்களுக்கு பகிர்ந்திருந்தார்.

இதில் பதிவிடப்படும் ஒவ்வொரு விடீயோவையும் பல லட்சம் பார்வையாளர்கள் தொடர்ந்து பார்த்து வந்தனர். இதன் உரிமையாளர் யார் என்றே யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது முழு உண்மையும் வெளிவந்துள்ளது.

பிரபல youtuber புற்றுநோய் பாதிப்பால் மரணம் - தந்தை மூலம் ரசிகர்களுக்கு  உண்மையை வெளியிட்ட சோகம் !

ஆனால், வெளிவந்த இந்த தகவல் ”Technoblad” பக்கத்தை பின்தொடரும் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பக்கத்தின் உரிமையாளர் அலெக்ஸ் என்ற நபர் என்பதும், 23 வயதான அவர் கேன்சர் நோயால் உயிரிழந்துள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த தகவல் அலெக்ஸ் உயிரிழந்த பின்னரே பிறருக்கு தெரியவந்துள்ளது. தான் உயிரிழக்கும் முன்னர் தான் யார் என்பதை அனைவர்க்கும் வெளிப்படுத்த விரும்பிய அலெக்ஸ், ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தை அவர் இறந்த பின்னரே அவர் தந்தை வெளிப்படுத்தியுள்ளார்.

”Technoblad” யூ-டியூப் பக்கத்தில் பதிவிடப்பட்ட விடீயோவில் தோன்றிய அலெக்ஸ்ஸின் தந்தை தன் மகன் எழுதிய உணர்ச்சிகரமான கடிதத்தை வாசித்துள்ளார். அந்த கடிதத்தில், அனைவருக்கும் வணக்கம், இதை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால். நான் இறந்துவிட்டேன். எனது உண்மையான பெயர் அலெக்ஸ், நான் டேவ் என்று பொய்யான பெயரில் உங்களை ஏமாற்றி வந்துள்ளேன்.பல ஆண்டுகளாக என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. எனக்கு இன்னும் நூறு உயிர்கள் இருந்தால், ஒவ்வொரு முறையும் நான் டெக்னோபிளேடாகத் தேர்வுசெய்வேன் என்று நினைக்கிறேன், ஏனெனில் அவை என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான ஆண்டுகள் " எனக் கூறியுள்ளார்.

அவரின் இந்த மரணம் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories