இந்தியா

விரைவில் வருகிறது புதிய தொழிலாளர் சட்டம் - PF, சம்பளம், வேலை நேரத்தில் மாற்றம் கொண்டு வரும் ஒன்றிய அரசு!

ஒன்றிய அரசு புதிய தொழிலாளர் சட்டங்களை அறிமுகப்படுத்தும் நிலையில் அது குறித்த ஒரு பார்வை.

விரைவில் வருகிறது புதிய தொழிலாளர் சட்டம் - PF, சம்பளம், வேலை நேரத்தில் மாற்றம் கொண்டு வரும் ஒன்றிய அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒன்றிய அரசு புதிய தொழிலாளர் சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சட்டங்கள் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிய தொழிலாளர் விதிகளின்படி ஊழியர்களை பணி நேரம் 8 மணி நேரத்திற்குப் பதிலாக 12 மணி நேரமாக அதிகரிக்கும். ஆனால் அதே நேரம் அவர்களுக்கு வாரம் 3 நாட்கள் விடுமுறை அளிக்கவேண்டும். 12 மணி நேர வேலையே ஈடுகட்டும் விதமாக இந்த விடுமுறை அளிக்கப்படவுள்ளது.

விரைவில் வருகிறது புதிய தொழிலாளர் சட்டம் - PF, சம்பளம், வேலை நேரத்தில் மாற்றம் கொண்டு வரும் ஒன்றிய அரசு!

மேலும்,புதிய தொழிலாளர் விதியின்படி ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு ஊழியரின் மொத்த சம்பளத்தில் 50 % அடிப்படை சம்பளமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதேநேரம் தொழிலாளர்கள் கைக்கு வாங்கும் சம்பளம் இதன்மூலம் குறையும்.

அதேபோல, இந்த சட்டத்தின் மூலம் ஊழியர்கள் எடுக்கும் விடுமுறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஊழியர்கள் ஒரு ஆண்டில் எடுக்காத விடுமுறை அடுத்த ஆண்டுக்கு சேர்த்து கொள்ளப்படாது. ஆனால், இந்த சட்டத்தின் மூலம் ஊழியர்களின் ஓராண்டு எஞ்சியிருக்கும் விடுமுறையை அவர்கள் அடுத்த பணி ஆண்டில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.

விரைவில் வருகிறது புதிய தொழிலாளர் சட்டம் - PF, சம்பளம், வேலை நேரத்தில் மாற்றம் கொண்டு வரும் ஒன்றிய அரசு!

இந்த சட்டத்தை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே இந்த மாநிலங்களில் இந்த சட்டம் அமலுக்கு வராது. ஆனால் அதேநேரம் ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், பீகார், பஞ்சாப், ஹரியானா, அருணாசலப் பிரதேசம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் புதிய தொழிலாளர்கள் விதிகளை ஏற்றுக் கொண்டுள்ளதால் அந்த மாநிலங்களில் இந்த சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. .

banner

Related Stories

Related Stories