இந்தியா

"இதைத்தான் அப்போவே நாங்கள் சொன்னோம்,ஏன் இந்த அக்கப் போர்" - வேதனையில் புலம்பும் உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிராவில் பா.ஜ.க இப்போது செய்துள்ள ஏற்பாட்டைதான் நான் முன்பே அமித்ஷாவிடம் கூறினேன் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

"இதைத்தான் அப்போவே நாங்கள் சொன்னோம்,ஏன் இந்த அக்கப் போர்" - வேதனையில் புலம்பும் உத்தவ் தாக்கரே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பா.ஜ.கவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

ஆனால் இதற்கு உடன்படாத பா.ஜ.க தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பா.ஜ.க சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.

"இதைத்தான் அப்போவே நாங்கள் சொன்னோம்,ஏன் இந்த அக்கப் போர்" - வேதனையில் புலம்பும் உத்தவ் தாக்கரே!

ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.

சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பா.ஜ.க ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். துணை முதல்வர் பதவி பா.ஜ.கவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது.

"இதைத்தான் அப்போவே நாங்கள் சொன்னோம்,ஏன் இந்த அக்கப் போர்" - வேதனையில் புலம்பும் உத்தவ் தாக்கரே!

இந்த நிலையில் இது குறித்து கூறியுள்ள உத்தவ் தாக்கரே, "ஏக்நாத் ஷிண்டே மஹாராட்டிர முதல்வராக்கப்பட்டுள்ளார். இதைபோன்ற ஏற்பாட்டைத்தான் சிவசேனா-பா.ஜ.க கூட்டணியில் இருக்கும்போது நான் அமித் ஷாவிடம் கூறினேன். அதாவது இரண்டரை ஆண்டுகள் பா.ஜ.கவை சேர்ந்தவர் முதல்வராக இருக்கட்டும், இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்கட்டும் எனக் கூறினேன். அவர்கள் அப்படி செய்திருந்தால் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்திருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது" எனக் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories