விளையாட்டு

ஒரே ஆண்டில் 7 கேப்டன்கள் மாற்றம்.. தடுமாறுகிறதா இந்திய அணி? - 8வது கேப்டன் பும்ரா என்ன செய்யப்போகிறார் ?

கடந்த ஜூலை 2021 முதல் தற்போது வரை பல்வேறு சூழ்நிலை காரணமாக 8 கேப்டன்கள் இந்திய அணியை வழிநடத்தி சென்றுள்ளனர்

ஒரே ஆண்டில் 7 கேப்டன்கள் மாற்றம்.. தடுமாறுகிறதா இந்திய அணி? - 8வது கேப்டன் பும்ரா என்ன செய்யப்போகிறார் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய அணியின் 3 வகை போட்டிக்கும் கேப்டனாக திகழ்ந்த விராட் கோலி டி-20 போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதற்கு அடுத்து, ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் போட்டி கேப்டன் பொறுப்பையும் ராஜினாமா செய்தார்.

விராட் கோலி கேப்டனாக இருந்த தருணத்தில் அவர் இல்லாத போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். டெஸ்ட் போட்டியில் ரஹானே கேப்டனாக செய்யப்பட்டார்.

ஒரே ஆண்டில் 7 கேப்டன்கள் மாற்றம்.. தடுமாறுகிறதா இந்திய அணி? - 8வது கேப்டன் பும்ரா என்ன செய்யப்போகிறார் ?

அதைத் தொடர்ந்து விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதும் ரோஹித் சர்மா இந்திய அணியின் முழு நேர கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் கேப்டனாக பும்ராதேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன்மூலம் கடந்த ஜூலை முதல் இந்திய அணிக்குத் தலைமை தாங்கும் 8-வது கேப்டனாக பும்ரா செயற்படவுள்ளார். கடந்த ஜூலை 2021 முதல் தற்போது வரை பல்வேறு சூழ்நிலை காரணமாக ஷிகர் தவன், விராட் கோலி, ரோஹித் சர்மா, ரஹானே, கே.எல். ராகுல், ரிஷப் பந்த், பாண்டியா, மற்றும் பும்ரா ஆகிய 8 கேப்டன்கள் இந்திய அணியை வழிநடத்தி சென்றுள்ளனர்.

இதை இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால் ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு இந்தியாவின் 8-வது கேப்டனாக இங்கு களமிறங்குகிறார் பும்ரா. வேறு எந்த அணியிலும் குறுகிய காலத்தில் இத்தனை கேப்டன்கள் அணியை வழிநடத்தி இருப்பார்களா என்பது சந்தேகமே..

ஜூலை 2021 முதல் இந்திய அணியின் கேப்டன்கள்

ஷிகர் தவன் - 3 ஒருநாள், 3 டி20

விராட் கோலி - 7 டெஸ்டுகள், 5 டி20

ரோஹித் சர்மா - 2 டெஸ்டுகள், 3 ஒருநாள், 9 டி20

ரஹானே - 1 டெஸ்ட்

கே.எல். ராகுல் - 1 டெஸ்ட், 3 ஒருநாள்

ரிஷப் பந்த் - 5 டி20

பாண்டியா - 2 டி20

பும்ரா - 1 டெஸ்ட்

banner

Related Stories

Related Stories