வைரல்

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட கடன் செயலி: அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரின் நண்பர்களுக்கு அனுப்பிய கடன் செயலியின் முகவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட கடன் செயலி: அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

26 வயது பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தான் திருமணம் செய்ய போகிறவர் என் செலவுகளை கவனித்து வந்தார் எனவும், ஆனால் அவருக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதாக கூறியதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதற்காக இந்த பெண் யூடியூப்பில் தான் பார்த்த ​​கடன் செயலிக்கான விளம்பரத்தைப் பயன்படுத்தி அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்.

பின்னர் அந்த செயலியை தனது தொடர்புப் பட்டியல் மற்றும் கேலரியை அணுக அனுமதி அளித்துள்ளார். ஆனால் பின்னர் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று முடிவு செய்த அவர் அந்த செயலியை தனது போனில் இருந்து நீக்கியுள்ளார். அந்த செயலி மூலம் அவர் எந்த கடனும் பெறவில்லை.

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட கடன் செயலி: அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

இந்நிலையில், சில நாட்களில் முன்பின் தெரியாத எண்ணிலிருந்து அவருக்கு கடனை திரும்ப செலுத்த வலியுறுத்தி வெளிப்படையான பாலியல் மிரட்டல்கள் வரத் தொடங்கியது. அதில் பேசிய நபர் அந்த பெண்ணையும் அவர் தாயையும் அவதூறாகப் பேசியுள்ளனர்.

மேலும், இவரது புகைப்படத்தைப் தவறாக சித்தரித்து இவரது போனில் இருக்கும் நண்பர்கள், உறவினருக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தான் காவல் நிலையத்தை அணுகியதாகவும், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை வேண்டும் வேண்டும் எனவும் தான் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார்.

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட கடன் செயலி: அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

சமீப நாட்களாக இது போன்ற கடன் செயலிகளால் அதிகம் புகார்கள் வந்த நிலையில் தற்போது கடனே வாங்காத நபர்களையும் கடன் செயலி முகவர்கள் மிரட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories