வைரல்

“எங்கள் வம்சத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை” : ஹெலிகாப்டரில் அழைத்து வந்து அசத்திய தந்தை !

மகாராஷ்டிராவில் பெண் குழந்தை பிறந்ததை ஒரு மாவட்டமே வியக்கும் அளவுக்கு கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“எங்கள் வம்சத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை” : ஹெலிகாப்டரில் அழைத்து வந்து அசத்திய தந்தை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் ஷெல்காவோன் பகுதியைச் சேர்ந்தவர் விஷால். வழக்கறிஞரான இருவருக்கு ஜரேகரின் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. தங்கள் குடும்பத்தில் பல தலைமுறைகளாக பெண் குழந்தைகளே இல்லை என்ற ஏக்கம் விஷாலுக்கு இருந்துள்ளது.

இந்நிலையில் விஷால் ஜரேகரின் தம்பதியருக்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்தின் போது மனைவி அவரது அம்மா வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனிடையே மூன்று மாதத்திற்கு பிறகு மீண்டும் கணவர் வீட்டிற்கு குழந்தையுடன் அழைத்துவருவதால் மாவட்டமே வியக்கும் அளவுக்கு பல்வேறு ஏற்பாடுகள் நடந்தியுள்ளார் விஷால்.

அதுமட்டுமல்லாது, முதன்முறையாக பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் விதமாக விஷால் தனது குழந்தையை மாமியார் வீட்டில் இருந்து அழைத்து வர ஒரு லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த ஹெலிகாப்டரிலேயே தனது வீட்டிற்கு விஷால் ஜரேகர் அழைத்து வந்துள்ளார்.

இதுதொடர்பாக விஷால் கூறுகையில், எங்கள் வீட்டிற்கு வாரிசாக வரும் முதல் பெண் என்னுடைய குழந்தைதான். அதனால் தான் எங்கள் வீட்டு மகளை வரவேற்க சிறப்பான ஏற்பாட்டை செய்திருக்கிறோம் என்றார். மேலும் ஹெலிகாப்டரில் வந்த குழந்தையை காண ஏராளமக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories