தமிழ்நாடு

திருடச் சென்ற இடத்தில் சினிமா பாணியில் சிக்கிக் கொண்ட திருடன் - ஆந்திராவில் நடந்த கலகலப்பு சம்பவம்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் திருடச் சென்ற இடத்தில் இளைஞர் சுவற்றின் ஓட்டையில் மாட்டிக்கொண்ட வீடியோ காட்சிகள் இணைத்தில் வைரலாகி வருகிறது.

திருடச் சென்ற இடத்தில் சினிமா பாணியில் சிக்கிக் கொண்ட திருடன் - ஆந்திராவில் நடந்த கலகலப்பு சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஜடிமுகடி கிராமத்தில் அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பாப்பாராவ் என்ற இளைஞர் கோவில் நகைகளை திருடி விட்டு அங்கிருந்து தப்பிப்பதற்காக கோயிலில் இருந்த ஓட்டை வழியாக வெளியே செல்ல முயற்திருக்கிறார்.

அப்போது அவருடை பாதி உடல் மட்டும் கோயிலுக்கு வெளியே சென்ற நிலையில், மீது உடல் பகுதி உள்ளே வசமாக சிக்கிக்கொண்டது. இதனால் பாதிலேயே சிக்கிக்கொண்ட நிலையில் விடியும் வரை சிக்கியுள்ளார்.

பின்னர் அங்கு வந்தமக்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து, பிறகு அவரை மீட்டு போலிஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலிஸார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பான வீடியோ இணைத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories