வைரல்

எச்சரிக்கை : காலநிலை மாற்றத்தால் இந்திய மக்கள் சந்திக்கவிருக்கும் பேராபத்து - IPCC ஆய்வு சொல்வது என்ன?

2100ஆம் ஆண்டில் இன்றைக்கும் இருக்கும் விவசாய நிலங்கள் பெரும்பாலானவை விவசாயத்திற்கு ஏற்றதாக இருக்காது என ஐ.பி.சி.சி ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

எச்சரிக்கை : காலநிலை மாற்றத்தால் இந்திய மக்கள் சந்திக்கவிருக்கும் பேராபத்து - IPCC ஆய்வு சொல்வது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சுற்றுச்சூழல் சீர்கேட்டின் காரணமாக உலகம் முழுவதும் அசாதாரணமான வகையில் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஏதோவொரு மூலையில் 23 ஹெக்டேர் நிலம் வளத்தை இழந்தும் மரங்களை இழந்தும் பாலையாகிக் கொண்டிருக்கிறது என ஐ.நா முன்பே எச்சரித்தது.

அதுமட்டுமின்றி, பனிப்பாறைகள் உருகி உலகில் உள்ள பெரும்பாலான நகரங்கள் நீரில் முழ்கும் என்றும் எச்சரித்திருந்தது. இந்நிலையில் அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் அண்டார்டிகா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

அதேபோல், இந்தியாவின் மேற்பரப்பில் பரந்துவிரிந்து கிடக்கும் பனிப்பாறைகள் நிறைந்த இமயமலையில் பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகுகின்றன. சமீபத்தில் கூட சுற்றுச்சூழல் மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள், அதன் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது.

எச்சரிக்கை : காலநிலை மாற்றத்தால் இந்திய மக்கள் சந்திக்கவிருக்கும் பேராபத்து - IPCC ஆய்வு சொல்வது என்ன?

இந்நிலையில் வரும் 2100ஆம் ஆண்டில் இன்றைக்கும் இருக்கும் விவசாய நிலங்கள் அதிக சதவீதம் விவசாயத்திற்கு ஏற்றதாக இருக்காது என்று ஐ.பி.சி.சி ஆய்வு அறிக்கை அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பமயமாதல் போக்கைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அபாய எச்சரிக்கை நடவடிக்கை ஐ.நா. காலநிலை மாற்றத்திற்காக ஐ.பி.சி.சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த 2022 பிப்ரவரி 28ஆம் தேதி 67 நாடுகளைச் சேர்ந்த 270க்கும் மேற்பட்ட வல்லுநர்களின் பங்கெடுப்பில் உருவாக்கப்பட்ட ஆய்வு அறிக்கையை ஐ.பி.சி.சி வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‘உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள நவீன வாழ்க்கை முறையால், இயற்கையை விட வெப்பம் அதிக அளவில் உருவாகியுள்ளது. அப்படி உருவாகும் அளவுக்கு அதிகமான வெப்பத்தை பூமியில் இருந்து வெளியேறாமல் தடுக்கப்படுகிறது. இதனை வெளியேற்றுவதற்கான வழிமுறையை உலக நாடுகள் ஏற்படுத்தாவிடில், இந்தப் புவியில் உள்ள உயிர்களின் வாழ்க்கைத் தரமும், நிலையான எதிர்காலமும் நிச்சயம் பாதிக்கப்படும் என எச்சரித்த ள்ளது.

மேலும், பசுமை இல்ல வாயு உமிழ்வுகளின் தாக்கத்தைக் குறைந்தபட்சமாக கணக்கிட்டாலும் 2100ஆம் ஆண்டு உலக வெப்பநிலை 1.5 டிகிரிக்கு குறைவாக எடுத்துக்கொண்டாலும் அதே ஆண்டில் (2100) இன்றைய விவசாய நிலங்களில் 8 சதவீதம் விவசாயத்திற்கு ஏற்றதாக இருக்காது. ஜனத்தொகை அதிகரிக்கும் அதேவேளையில், விவசாய பரப்பும் பெரிய அளவில் குறையும்.

எச்சரிக்கை : காலநிலை மாற்றத்தால் இந்திய மக்கள் சந்திக்கவிருக்கும் பேராபத்து - IPCC ஆய்வு சொல்வது என்ன?

குறிப்பாக, இந்தியா பெரும் அச்சுறுத்தல்களைச் சந்திக்கும். அதில், மும்பையில் 2023ஆம் ஆண்டு 2.7 கோடி மக்கள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படலாம். வெள்ளம் மற்றும் கடல்மட்டம் அதிவிரைவாக உயரும் அபாயம் ஏற்படும். அதேபோல், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 1.1 கோடி மக்கள் நகர்ப்புற வெப்பத் தீவில் வசிக்கும் அபாயகட்டத்தை எட்டியிருக்கிறார்கள்.

* அதேநேரம் உலக வெப்பம் சுமார் 1.5 டிகிரி மட்டும் அதிகரித்தால் கூட, 10 வயதுக்குட்பட சிறுவர்களின் வாழ்க்கை முந்தைய தலைமுறையைவிட சுமார் 4 மடங்கு மேசமான விளைவுகளை சந்திக்கும். இந்த தீவிர இயற்கை நிகழ்வு கண்டிப்பாக நடந்தே தீரும்.

* புவி வெப்பம் இருக்கவேண்டியதைவிட 2 டிகிரி அதிகரித்தாலும் கூட, நிலத்தில் உள்ள உயிரினங்களில் 18 சதவீதம் அழிந்துபோகும் அபாயம் அதிகமுள்ளது. இதில் 80 லிருந்து 300 கோடி மக்கள் வறட்சியின் காரணமாகத் தொடர்ந்து நீர் பற்றாக்குறையை தொடர்ந்து அனுபவிப்பார்கள். உயிரிழப்பிற்கும் அதிகம் வாய்ப்புள்ளது.

* அதேவேளையில் 2 டிகிரி அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலை அதிகமானாலும் கூட, துருவ விலங்கினங்கள் அதாவது, மீன்கள், பென்குவின்கள், சீல் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் துருவக் கரடிகள் உட்பட பவளப்பாறைகள் மற்றும் சதுப்புநிலங்கள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.

எச்சரிக்கை : காலநிலை மாற்றத்தால் இந்திய மக்கள் சந்திக்கவிருக்கும் பேராபத்து - IPCC ஆய்வு சொல்வது என்ன?

* இதுவே வெப்பநிலை 3 டிகிரிக்கு உயர்ந்தால், வானிலையின் தீவிரம் 5 மடங்கு அதிகரிக்கும். உலக அளவில் கொடிய வெப்ப அழுத்தங்கள் மக்கள்தொகை சதவிகிதத்தில் தற்போது உள்ள 30 சதவிதத்திலிருந்து நூற்றாண்டின் இறுதியில் 48 முதல் 76 சதவீதம் வரை அதிகரிக்கும். 50 சதவித தாவர - விலங்கினங்கள் அழிந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.

* அடுத்தது 4 டிகிரி அதிகரித்தால், தெற்கு ஆசியாவின் சில பகுதிகளில் வெளியில் பணி செய்வோருக்கு காலநிலை மாற்றத்தால் மன அழுத்தம் ஏற்படும். வேலைத் திறனும் கனிசமாகக் குறையும். இதன்விளைவாக உற்பத்தி குறையும். வருமானம் பல மடங்கு அடிவாங்கும் சூழலில் உணவு விலை வெகுவாக அதிகரிக்கும். தெற்கு ஆசியாவில் 70 சதவிகிதம் இந்திய மக்கள் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2050ஆம் ஆண்டு உலக மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பேர் நகர்புறங்களில் வசிப்பார்கள். வெப்ப அலைகள் (Heat wave ) போன்ற தீவிர வானிலை மாற்றங்கள் அதிகளவில் நிகழும். காற்றுமாசு பாடு, போக்குவரத்து, நீர், குடிநீர், சுகாதாரம் மற்றும் மின் ஆற்றல் அமைப்புகள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்பு தனது செயல்பாட்டை இழக்க நேரிடும்.

அதேபோல், மேற்கு - மத்திய மற்றும் தெற்கு ஆசியா வறண்ட மற்றும் வறட்சியை நோக்கித் தள்ளப்படும். மேலும் தெற்கு - தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவின் பருவமழை பகுதிகளில் வெள்ளம், பணிப்பாறை உருகுதல் மற்றும் ஆசியா முழுவதும் வெப்ப அலைகள் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளது.

எச்சரிக்கை : காலநிலை மாற்றத்தால் இந்திய மக்கள் சந்திக்கவிருக்கும் பேராபத்து - IPCC ஆய்வு சொல்வது என்ன?

மேலும் இந்த தூற்றாண்டின் உறுதியில் ஆசிய நாடுகளில் வறட்சி நிலை என்பது 5 முதல் 20 சதவிகிதம் வரை அதிகரிக்கும். இந்தத் தொடர் வெப்ப உயர்வுகளால் சில சமயம் சில இடங்களில் தீவிர நிலைகளால் மீள முடியாத மாற்றங்கள் ஏற்படலாம். உதாரணமாக உயிரினங்கள் அழிந்துபோவது போன்று, உலக வெப்பநிலையில் ஒவ்வொரு படி உயர்வுக்கும் அதைவிட பலமடங்கு எதிர்மறைவு விளைவுகள் ஏற்படும்.

இந்தக் காலநிலை மாற்றங்களில் மிக முக்கியமாக விவசாய உற்பத்தித் திறன் குறைவு, மனித ஆரோக்கியத்தின் மீதான தாக்கம், வீடுகளில் அழிவு உட்பட வருமான இழப்பு போன்றவையும், தனிமனித வாழ்வாதம் பாதிக்கப்படும் சூழலில், சங்கிலித்தொடராக பாலினம், சாதி, வர்க்கம் மற்றும் பிற சமூக-பொருளாதார சமத்துவமின்மையும் அதிகரிக்கும் என கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

எனவே முன்னேறிய நாடுகளாக கருத்தப்படும் நாடுகள் காலநிலை மாற்றத்திற்கு மிகமுக்கிய காரணம் என்பதால் அதை ஈடுகட்டவேண்டிய பொறுப்புமும் அதிகமுள்ளது. அதனால், தட்பவெப்ப மாற்றத்தின் தாக்கத்தை சரியாக புரிந்துகொண்டு செயல்படவேண்டும். “காலநிலை மாற்றமும் ஒரு வர்க்கப் பிரச்சனையே” என மக்கள் உணரத் தொடங்கிய இந்தவேளையில் தனது பொறுப்பில் இருந்து மேல்தட்டு நாடுகள் கழன்றுகொள்ள முடியாது.

banner

Related Stories

Related Stories