தமிழ்நாடு

“அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்.. பேரிடர்களை இனி தடுக்க முடியாது” : GLASGOW மாநாடு ஏன் முக்கியமாகிறது?

உலகில் காலநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் அபாயங்களை இனி தடுக்க முடியாது என கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ஐபிசிசி அறிக்கை எச்சரிக்கை செய்துள்ளது

“அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்.. பேரிடர்களை இனி தடுக்க முடியாது” : GLASGOW மாநாடு ஏன் முக்கியமாகிறது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சுற்றுச்சூழல் சீர்கேட்டின் காரணமாக உலகம் முழுவதும் அசாதாரணமான வகையில் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஏதோவொரு மூலையில் 23 ஹெக்டேர் நிலம் வளத்தை இழந்தும் மரங்களை இழந்தும் பாலையாகிக் கொண்டிருக்கிறது என ஐ.நா முன்பே எச்சரித்தது.

அதுமட்டுமின்றி, பனிப்பாறைகள் உருகி உலகில் உள்ள பெரும்பாலான நகரங்கள் நீரில் முழ்கும் என்றும் எச்சரித்திருந்தது. இந்நிலையில் அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் அண்டார்டிகா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

அதேபோல், இந்தியாவின் மேற்பரப்பில் பரந்துவிரிந்துகிடக்கும் பனிப்பாறைகள் நிறைந்த இமயமலையில் பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகுகின்றன. சமீபத்தில் கூட சுற்றுச்சூழல் மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள், அதன் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது.

“அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்.. பேரிடர்களை இனி தடுக்க முடியாது” : GLASGOW மாநாடு ஏன் முக்கியமாகிறது?

அதில், காலநிலை மாற்றமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் பருவநிலை மாற்றங்களால் அதிக உயிரிழப்பு இந்தியாவில் நடந்திருப்பதாகவும், அதேபோல பருவநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் உலக அளவில் இந்தியா 5வது இடத்தில் இருப்பதாகவும் அதிர்ச்சி புள்ளிவிவரமும் இதில் வெளியாகியுள்ளது.

உலக அளவில் காலநிலை மாற்றங்களால் அதிக இழப்பைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், 1999ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 17வது இடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதேபோல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் காலநிலை மாற்றத்தால் பேரழிவை சந்தித்து உள்ளது.

இந்த சூழலில், காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைப்பது தொடர்பான பருவநிலை மாநாடு ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் ஆக்டோபர் 30ம் தேதி தொடங்கி நவம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

“அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்.. பேரிடர்களை இனி தடுக்க முடியாது” : GLASGOW மாநாடு ஏன் முக்கியமாகிறது?

உலகில் காலநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் அபாயங்களை இனி தடுக்க முடியாது என கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ஐபிசிசி அறிக்கை எச்சரிக்கை செய்துள்ளது. இதுகுறித்தான முடிவு அந்த மாநாட்டில் என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலேயே இந்த மாநாடு உலக மக்களின் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முக்கிய தீர்மானம் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கிளாஸ்கோ மாநாட்டின் மூலம் எதிர்கால தலைமுறையினருக்கு உறுதியான நம்பிக்கையை உலக நாடுகளின் தலைவர்கள் ஏற்படுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories