வைரல்

மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெள்ளாவின் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.. 26 வயதில் நேர்ந்த சோகம்!

மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெள்ளாவின் மகன் 26 வயதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெள்ளாவின் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.. 26 வயதில் நேர்ந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா கடந்த 2014ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். இவர் மைக்ரோசாஃப்ட் பணிகளுக்கு இடையே, மாற்றுத்திறனாளிகள் எளிதில் கல்வி கற்கும் வகையில் பல புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், சத்யா நாதெள்ளா - அனு தம்பதியின் மகன் ஜைன் நாதெள்ளா பெரும் மூளை வாத நோயால் பாதிக்கப்பட்டு நீண்ட ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்து வந்தார். இதனிடையே கடந்த சில வாரங்களாக நோய் பாதிப்பால், அதிகம் பாதிக்கப்பட்ட ஜைன் நாதெள்ளா, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தத் தகவலை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் துயரமான சூழலில் சத்யா நாதெள்ளாவின் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்றும், அவர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

banner

Related Stories

Related Stories