வைரல்

ச்சோஓஓ ஸ்வீட் தலைவரே.. ஒட்டுமொத்த உடன்பிறப்புக்களையும் உற்சாகத்தில் மிதக்க விட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தனது உரையின் முதல் பகுதியில், ஆளுநர் உரையில் இருந்த, தங்கள் இயக்கத்தின் கொள்கை சார்ந்த... சமூகநீதி மற்றும் மாநில சுயாட்சி சம்பந்தப்பட்ட விடயங்களை ஹைலைட் பண்ணி..

ச்சோஓஓ ஸ்வீட் தலைவரே.. ஒட்டுமொத்த உடன்பிறப்புக்களையும் உற்சாகத்தில் மிதக்க விட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான சிறப்புரையில்..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் அவர்களின் உரை.. மிகப்பெரும் காட்டாற்று வெள்ளம் இரு கரைகளுக்கும் இடையே கட்டுப்பாட்டுடன்... வெளிப்பார்வைக்கு தெளிந்த நீரோடையாக ஓடி வருவது போல... அவ்ளோ ஒரு ரம்மியத்துடன் அமைந்து விட்டிருந்தது..!!

தனது உரையின் முதல் பகுதியில், ஆளுநர் உரையில் இருந்த, தங்கள் இயக்கத்தின் கொள்கை சார்ந்த... சமூகநீதி மற்றும் மாநில சுயாட்சி சம்பந்தப்பட்ட விடயங்களை ஹைலைட் பண்ணி...

ஒரே நேரத்தில் ஆளுநருக்கு நன்றியையும்.. சங்கிகளுக்கு ஜெலுஸிலையும் கொடுத்துவிட்டு.. இரண்டாவது பகுதியாக, தனது எட்டு மாதகால ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டார்....! பட்டியலிட்டார் என்றால், அனைத்தையும் முழுமையாக பட்டியலிட அவராலேயே முடியவில்லை. கொஞ்ச நஞ்சமாவா செஞ்சி வச்சிருக்காரு..?!

உதாரணத்திற்கு தமிழ்நாட்டு பெண்கள் அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இன்று திளைக்க வைத்துக் கொண்டிருக்கும்... மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் உட்பட எண்ணற்ற நலத்திட்டங்களை... அவரே நேரத்தின் அருமை கருதி கடந்து சென்று விட்டார் போலும்..!

அவர் உரையின் மூன்றாம் பகுதிதான் தி.மு.க. உடன்பிறப்புக்கள் அனைவரையும் துள்ளிக் குதித்து நிமிர்ந்து உட்கார வைத்த மகிழ்ச்சியை கொடுத்த ஒன்று..!

வெளிநடப்பு செய்திருந்த எடப்பாடி வகையறாக்களை ரொம்ப சர்காஸ்டிக்காக முட்டு சந்துக்குள்ளாற வச்சு செஞ்சுவிட்டு... மீன்பாடி வண்டில போட்டு அனுப்பி வச்ச கதையாட்டமா இருந்துச்சி...!

அம்மா கிளினிக் எல்லாம் இனி தேவையே இல்லை... அந்த டுபாக்கூர் திட்டத்துக்கு பதிலாத்தான் மக்களுக்கு உண்மையாகவே பலனளிக்கும் மக்களைத் தேடி மருத்துவம் கொண்டு வந்திருக்கோம்.... ஆனா அம்மா உணவகம் இருக்கும்ன்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன்... என் ஸ்டேண்ட்ல இப்பவும் உறுதியா இருக்கேன்.. டாட்..!

பெயர் மாற்றம் பற்றியெல்லாம் பேச எதிரிகளுக்கு அருகதையே கிடையாதுன்னு.... அ.தி.மு.க. ஆட்சில முடக்கப்பட்ட, பெயர் மாற்றப்பட்ட பத்திருபது தி.மு.க. ஆட்சிக்கால நற்திட்டங்களை சாம்ப்பிளுக்காக பட்டியலிட்டுவிட்டு.... சட்டம் ஒழுங்கு, கைது நடவடிக்கைகள் பற்றி எல்லாம் எடப்பாடி பேசியதை தாறுமாறாக கிழித்து தொங்கவிட்டார். தப்பு பண்ணிட்டு பதுங்கினா, யாரா இருந்தாலும் தூக்கிடுவோம்ன்னு அவர் பேசிய போது... சத்திரியன் படத்தில் வரும் பழைய பன்னீர்செல்வமா.... தப்பு செஞ்சவங்களை விட்டுட்டு தேடாத எங்கள் பழைய இளைஞரணி செயலாளரை கண் முன்னே காட்டி... ஒட்டுமொத்த உடன்பிறப்புக்களையும் உற்சாகத்தில் மிதக்க விட்டார்..! ச்சோஓஓஓஓ.... ஸ்வீட் தலைவரே..!

சௌமியன் வைத்தியநாதன்., பத்திரிகையாளர்.

நன்றி : - முரசொலி

banner

Related Stories

Related Stories