
தியாகி இம்மானுவேல் சேகரனார் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக சமத்துவத்திற்காகவும் போராடிய மிக முக்கியமான விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி ஆவார்.
இன்று இம்மானுவேல் சேகரனாரின் 69 ஆவது நினைவுநாளைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ”தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாளினை அரசு விழாவாகக் கொண்டாட ஆணை, பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் என அவரது நினைவைப் போற்றும் சிறப்பான பணிகளைக் கடந்த திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொண்டோம்.
நாட்டின் விடுதலைக்காகவும், சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்த இம்மானுவேல் சேகரனாரின் பணிகளும் தியாகமும் சமத்துவத்தை நோக்கிய நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்! இம்மானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.






