வைரல்

அதிகாலையிலேயே ECR ரோட்டில் சைக்கிள் பயிற்சி.. ‘மெர்சல்’ செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ! (VIDEO)

சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிகாலையிலேயே ECR ரோட்டில் சைக்கிள் பயிற்சி.. ‘மெர்சல்’ செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ! (VIDEO)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சிப் பணிகள், அலுவல் பணிகளுக்கு மத்தியில் சைக்கிள் பயணம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்து வருகிறார். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்வது, நடைப்பயிற்சி செய்வது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது என உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

அந்தவகையில், வாரத்தில் 3 நாட்கள் சைக்கிளில் சுமார் 20 முதல் 30 கிலோ மீட்டர் தூரம் காலையில் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், வழக்கம்போல் இன்று காலை சைக்கிள் பயணத்தை தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவளம், திருவிடந்தை, வடநெம்மேலி, நெம்மேலி, புதிய கல்பாக்கம், சூளேரிக்காடு, பட்டிப்புலம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரத்துக்கு சைக்கிளில் வந்தார்.

அப்போது, வழியில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களை பார்த்து சிரித்த முகத்துடன் கையசைத்தவாறு பயணித்தார். பதிலுக்கு பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் அவரை பார்த்து கையசைத்தனர். பின்னர் அங்கிருந்த சாலையில் உள்ள தேநீர்க் கடையில் அமர்ந்து தேநீர் அருந்திய முதல்வர் அங்கிருப்பவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    banner

    Related Stories

    Related Stories